எஸ்.எஸ்.சந்திரன் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: மத்திய சென்னை வேட்பாளராக அதிமுக அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்ட நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை எதிர்த்து எஸ்.எஸ்.சந்திரன் நிறுத்தப்பட்டார். ஆனால், மாறனை எதிர்க்கும் வலு சந்திரனுக்கு இல்லை என்ற பேச்சு எழுந்தது.
இந் நிலையில் நேற்று முன் காலை தான் எஸ்.எஸ்.சந்திரன் தனது பிரசாரத்தைத் தொடங்கினார். பல்வேறு இடங்களுக்கும் சென்று அவர் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்.
பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்தில் போய் உட்கார்ந்தார்.
அப்போது அவருக்கு போயஸ் கார்டனில் இருந்து அழைப்பு வந்தது.
போய்விட்டு அரை மணி நேரத்தில் திரும்பி வந்து பிரச்சாரத்தைத் தொடர்வோம் என்று கூறிவிட்டுச் சென்றவர் வரவேயில்லை. இதனால் அவர் வருவார் என்று காத்திருந்த தொண்டர்கள் எரிச்சலடைந்த நிலையில் போயஸ் கார்டனில் இருந்து எஸ.எஸ். சந்திரன் 'நெஞ்சு வலி' காரணமாக மாற்றப்பட்டதாக தகவல் வந்தது.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக, அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
இதனால் எஸ்.எஸ்.சந்திரனுக்கு பதிலாக எஸ்.எம்.கே.முகமதுஅலி ஜின்னா வேட்பாளராக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து எஸ்.எஸ்.சந்திரன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications