அத்வானியை சந்தித்த வருண் காந்தி

டெல்லியில் அத்வானி வீட்டில் இந்தச் சந்திப்பு நடந்தது.
ஒசாமாவை 'ஒபாமா' ஆக்கிய அத்வானி:
இதற்கிடையே நேற்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் ஒசாமா பின் லேடன் என்று கூறுவதற்குப் பதிலாக ஒபாமா பின் லேடன் என்று அத்வானி கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.
மும்பைக்கு பிரசாரம் செய்ய வந்த அத்வானி அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், அல் கொய்தா அமைப்புக்கும், அதன் இதர அமைப்புகளுக்கும் நிதி வரும் இடங்களைக் குறி வைத்து அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா செயல்படுவது குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது ஒசாமா பின் லேடன் என்று கூறுவதற்குப் பதில் ஒபாமா பின் லேடன் என்று வாய் தவறி கூறி விட்டார்.
ஆனால் அடுத்த விநாடியே தனது தவறை உணர்ந்து ஒசாமா பின் லேடன் என்று திருத்திக் கூறினார்.
இதேபோலத்தான் லோக்சபாவில் சில மாதங்களுக்கு முன்பு பிரணாப் முகர்ஜி பேசுகையில், இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் என்று கூறுவதற்குப் பதில் இந்திய - ரஷ்ய அணு சக்தி ஒப்பந்தம் என வாய் தவறி ஒரு முறையல்ல, இரு முறை கூறினார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications