7 முனை போட்டியில் தென்காசி-கிருஷ்ணசாமியை எதிர்க்கும் பெரியப்பா மகன்
தென்காசி: தென்காசி தொகுதியில் ஏழு முனை போட்டி ஏற்பட்டுள்ளது. டாக்டர் கிருஷ்ணசாமியை எதிர்த்து அவரது பெரியப்பா மகன் சமாஜ்வாடி கட்சி சார்பில் களம் இறங்குகிறார்.
தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அனைத்துத் தொகுதிகளிலும் குறைந்தது 3 முனை அல்லது நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
எதிர்பாராத வகையில், பாஜக தலைமையில் ஒரு அணியும், புதிய தமிழகம் தலைமையில் இன்னொரு அணியும் உருவாகி வாக்காளர்களை பெரும் குழப்பத்தி்ல் ஆழ்த்தப் போகின்றன.
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய நான்கு பெரிய கட்சிகள் மோதுகின்றன.
புதிய தமிழகம் சார்பில் அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இங்கு போட்டியிடுகிறார். தற்போது அவரை எதிர்த்து அவரது பெரியப்பா மகன் ஜோதி ராஜ் களம் இறங்குகிறார். இவர் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
புதிய தமிழகம் கட்சியில் இருந்தவர்தான் ஜோதி ராஜ். அங்கு பல பொறுப்புளை வகித்துள்ளார். தற்போது அதிலிரு்நது விலகி சமாஜ்வாடியில் இணைந்து விட்டார்.
இவர்கள் தவிர பகுஜன் சமாஜ் கட்சியும் இங்கு போட்டியிடுகிறது. அதேபோல அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியும் போட்டியிடவுள்ளது.
எனவே இங்கு 7 முனைப் போட்டி ஏற்படப் போகிறது. இருப்பினும் காங்கிரஸ், சிபிஐ இடையேதான் முக்கியப் போட்டி நிலவும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications