டல்லடித்த ராமநாதபுரம் திமுக நிர்வாகிகளுக்கு அழகிரி கொடுத்த 'பூஸ்ட்'

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜே.கே.ரித்தீஷுக்கு ஆதரவாக களம் இறங்காமல் சுணக்கமாக இருந்த மாவட்ட திமுக நிர்வாகிகளை அழைத்து சற்று கடுமையாக பேசி அதே நேரத்தில் சிறப்பாக கவனித்து அனுப்பி வைத்திருக்கிறாராம் மு.க.அழகிரி.

இதனால் உற்சாகமடைந்துள்ள ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள், ரித்தீஷின் வெற்றிச் செய்தியோடு வந்து உங்களை சந்திக்கிறோம் என்று கூறி விட்டுச் சென்றுள்ளனராம்.

ராமநாதபுரம் திமுக வேட்பாளர் ரித்தீஷ் மீது தொகுதியில் உள்ள கழக நிர்வாகிகள் பலருக்கு உடன்பாடு இல்லையாம். இதனால் பிரசாரப் பணிகளில் ஈடுபடாமல் முடங்கிக் கிடக்கின்றனராம்.

இது வேட்பாளர் நடிகர் ரித்தீஷை அப்செட் ஆக்கி விட்டது. உடனடியாக மு.க.அழகிரியின் காதுக்கு இதை கொண்டு சென்றார்.

இதையடுத்து மாவட்ட திமுக நிர்வாகிகளை கூண்டடோடு அழைத்த மு.க.அழகிரி, ரித்தீஷை வெற்றி பெற வைக்க வேண்டியது உங்களது பொறுப்பு என்று சற்று கண்டிப்பான குரலில் கூறியுள்ளார்.

அது மட்டும் போதாது என்று நினைத்த அழகிரி, அனைவருக்கும் அருமையான விருந்து வைத்து, கூடுதலாகவும் கவனித்து ஊருக்கு அனுப்பி வைத்தாராம்.

அழகிரியின் கண்டிப்பால் சற்று கவலைப்பட்ட நிர்வாகிகள் அடுத்து அவர் வைத்த விருந்து உபசரிப்பால் குளிர்ந்து போய் விட்டனராம்.

கவலைப்படாதீங்கண்ணே, வெற்றிச் செய்தியோடு உங்களை வந்து சந்திக்கிறோம் என்று கூறி விட்டு உற்சாகமாக ஊர் திரும்பியுள்ளனராம்.

'விசுவாத்திற்கு மறு பெயர் அழகிரி'

இதற்கிடையே, விசுவாசத்திற்கு மறு பெயர் நம்ம அண்ணன் மு.க. அழகிரி தான் என்று தென் மண்டல திமுகவினர் மார் தட்டுகின்றனர்.

மதுரைக்கு முதல் முறையாக மு.க. அழகிரி வந்தபோது அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டி, வழிநடத்தியவர் மறைந்த முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன்.

இவரது மகள்தான் தமிழச்சி தங்கப்பாண்டியன். மகன்தான் அமைச்சர் தங்கம் தென்னரசு.

மு.க. அழகிரியின் மனதுக்கு பிடித்த மாதிரி நடந்து கொண்டதோடு, அவருக்கு தேவையான தருணங்களில் அரசியல் பாடம் சொல்லிக் கொடுக்கவும் தவறாதவர் தங்கப்பாண்டியன். இதனால் தங்கபாண்டியன் மீது மு.க. அழகிரிக்கு தீராத பாசம் உண்டு.

இதனால் தான் என்னவோ, தற்போது தொகுதியில் மக்களிடம் ஓட்டு கேட்டு வரும் போது யாராவது குழந்தையை கொடுத்து பெயர் வையுங்கள் என்றால், ஆண் குழந்தையாக இருந்தால் மறக்காமல் தங்கபாண்டியன், என்று பெயர் வைக்கின்றாராம் அழகிரி.

இதையடுத்து திமுகவினர் விசுவாசத்திற்கு மறு பெயர் மு.க. அழகிரி தான் புளகாங்கிதப்பட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+