விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் அறிமுகம் - காங்கிரஸ் புறக்கணிப்பு!
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் அறிமுக கூட்டத்தை காங்கிரஸ் கட்சியினர் புறக்கணித்தனர்.
விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் வேட்பாளராக முன்னாள் நீதிபதி சாமித்துரை போட்டியிடுகின்றார்.
இதற்கான அறிமுக கூட்டம் திருக்கோவிலூரில் நடைபெற்றது. அறிமுக கூட்டத்திற்கு திமுக சார்பில் கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு அனுப்பட்டிருந்தது.
ஆனால் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ சிவராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவில்லை.
இந்த தகவல் திமுக தலைமைக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமைக்கும், தமிழக காங்கிரஸ் கட்சி தலைமைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
விரைவில் எம்எல்ஏ சிவராஜ் மீது நடவடிக்கை பாயும் என அக் கட்சி வட்டாரத்தினர் கிசு கிசுக்கின்றனர்.












Click it and Unblock the Notifications