ஈழம்-நெல்லையில் காங்கிரசுக்கு எதிராக தமிழர்களம் துண்டு பிரசுரம்
நெல்லை: இலங்கை பிரச்சினையில் மத்தியில் இருக்கும் காங்கிரஸ் அரசின் செயல்பாட்டை கண்டித்து நெல்லை முழுவதும் தமிழர்களம் என்ற அமைப்பு அக்கட்சிக்கு எதிராக துண்டு பிரசுரங்களை வினியோகித்து வருகிறது.
இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வந்து அப்பாவி தமிழர்களை காக்க வேண்டும் என தமிழர்கள் உலகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இரண்டு நாள் போர் நிறுத்தத்திற்கு பிறகு ராஜபாக்சே அரசு தமிழர்கள் மீது மீண்டும் கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டினால் திருப்தியடையாத தமிழர்களம் என்ற அமைப்பு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நெல்லையில் துண்டு பிரசுரங்கள் வினியோகித்து வருகிறது.
அதில்,
இரத்தச் சகதியில் செத்து மடியது எங்கள் இனம்...
சிங்களனுக்கு ஆயுதம், ஆட்கள் பயிற்சி, பணம்
கருவிகள் அள்ளிக் கொடுத்த காங்கிரசுக்கு
எங்கள் வாக்கு இனி இல்லை...
என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. மாணவர்கள், பொதுமக்களிடமும் நாள்தோறும் இந்த அமைப்பினர் துண்டு பிரசுரங்களை வினியோகித்து வருவதால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications