நள்ளிரவில் சிவானந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வைகோ
கரூர்: இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சென்னையில் தீக்குளித்து உயிர்நீத்த சிவானந்தன் உடலுக்கு நள்ளிரவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்ணீர்விட்டு அஞ்சலி செலுத்தினார்.
தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவர் சிவானந்தன் (46). இவர் சென்னையில் பெயிண்டாரக பணியாற்றி வந்தார். கரூரைச் சேர்ந்த இவர் சென்னை வடபழனியில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்குச் சென்றார்.
பின்னர் அங்கிருந்த நுழைவாயில் முன்பு, இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பியபடி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
தீப் பற்றி எரிந்த நிலையிலும் இலங்கையில் போரை நிறுத்த இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல் கொடுத்த அவர் சிறிது நேரத்தில் சரிந்து விழுந்தார்.
தகவல் அறிந்த போலீசார் வந்து அவரை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது உடலில் 80 சதவீதம் அளவுக்கு தீக்காயம் ஏற்பட்டது.
சம்பவம் குறித்து அறிந்த பழ. நெடுமாறன் மருத்துவமனைக்கு ஓடிச் சென்று சிவானந்தன் நிலையைப் பார்த்து கண்ணீர் விட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் வந்து பார்த்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிவானந்தன் உயிரிழந்தார்.
தகவல் அறிந்த கரூரில் உள்ள சிவானந்தன் உறவினர்கள் கதறியழுதபடி சென்னைக்கு புறப்பட்டு சென்று அவரது உடலை வாகனம் மூலம் நள்ளிரவில் கரூர் கொண்டு வந்தனர்.
சிவானந்தன் உடல் வந்த சில நிமிடங்களில் மதிமுக பொதுச் செயாலளர் வைகோவும், நள்ளிரவில் சிவானந்தன் உடலுக்கு மலர் வளையம் வைத்து கண்ணீர் விட்டு கதறி அஞ்சலி செலுத்தினார்.
வைகோ கண்களில் இருந்து கண்ணீர் வருவதைக் கண்ட அவரது நிர்வாகிகளும், தொண்டர்களும் கண்ணீர் விட்டு அழுதனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications