ஐ.நா. பாதுகாப்பு சபையில் வன்னி குறித்து 29ம் தேதி விவாதம்
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில், வரும் 29ம் தேதி வன்னி நிலவரம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இதுதொடர்பான நிகழ்ச்சி நிரலில் அது சேர்க்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ நாட்டின் முயற்சியால் வன்னியில் ஏற்பட்டுள்ள மனிதஉரிமை அவலம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்கப்படவுள்ளது.
முதலில் இந்த விவாதத்தை வலியுறுத்த மெக்சிகோ விரும்பவில்லை என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் பலித கொகனோ கூறியிருந்தார். ஆனால் அதை உடனடியாக மெக்சிகோ மறுத்திருந்தது.
ஆயுத மோதல்களில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவது தொடர்பான பாதுகாப்புச் சபையின் செயற்குழு 29 ஆம் தேதி கூடுகிறது. அன்றே வன்னி நிலவரம் குறித்தும் ஆராயப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications