குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை-பிரேமலதா உறுதி

Subscribe to Oneindia Tamil

வத்தலக்குண்டு: தேமுதிக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விஜயகாந்தின் தேமுதிக அனைத்து தொகுதிகளும் தனித்து போட்டியிடுகிறது. தெய்வத்துடனும், மக்களூடனும் தான் கூட்டணி என விஜயகாந்த் சுறுசுறுவென சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இவருக்கு உதவும் வகையில் அவரது மனைவி பிரேமலதா சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் முத்துவேல்ராஜை ஆதரித்து பிரேமலதா வத்தலகுண்டு பகுதியில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

பள்ளிக்கு விடுமுறை விடுவார்கள். வேலைக்கு விடுமுறை விடுவார்கள். மின்சாரத்திற்கு விடுமுறை விட்டது திமுகஅரசு தான். மின்வெட்டு பிரச்சினையில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே பெரும் பங்கு உண்டு.

கடந்த முறை உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உங்களது குடிநீர் பிரச்சினையைக் கூட தீர்க்கவில்லை. உங்களால் வெற்றி பெற்று டெல்லி சென்றவர்கள் தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொண்டார்கள். உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினார்களா?

அரசு அறிவத்த இலவச கலர் டிவி, 2 ஏக்கர் நிலம், கேஸ் அடுப்பு போன்றவற்றால் கட்சிகாரர்களின் பினாமிகளுக்கு தான் ஆதாயம் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மக்கள் முத்துவேல் ராஜை தேர்ந்தெடுத்தால் அவர் தனது கல்வி நிறுவனங்களில் ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்குவார். அனைவரும் முரசு சின்னத்தில் வாக்களியுங்கள்.

பிற கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் மக்களையும், தெய்வத்தையும் மட்டுமே நம்பி விஜயகாந்த் தேர்தலை சந்தித்து வருகிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுப்போம் என்றார் பிரேமலதா

தேமுதிக தொண்டர் பலி...

திண்டுக்கல்லில் பிரச்சாரம் முடித்துவிட்டு பழனிக்கு அருகே நெய்க்காரப்பட்டியில் பிரச்சாரம் செய்ய பிரேமலதா சென்றார். அவரது வேனுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் தேமுதிவினர் சிலர் மாருதி வேனில் சென்றனர்.

வேன் தும்பலம்பட்டி அருகே சென்ற போது எதிரே வந்த லாரி வேன் மீது மோதியது. இதில் தேமுதிக தொண்டர் குணசேகரன் (32) என்பவர் பலியானார். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ப்டடுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+