காதில் பூ சுற்றி சுயேச்சை வேட்பு மனு தாக்கல்
நாமக்கல்: நாமக்கல் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வித்தியாசமாக காதில் பூ சுற்றி வந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை பகுதியைச் சேர்ந்தவர் விவேகானந்தம். நாமக்கல் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய மாவட்ட கலெக்டர் அலுவகத்திற்கு வந்தார். அப்போது அவர் தனது காதில் பூ சுற்றி கொண்டு வந்ததால் அங்கிருந்தவர்கள் அவரை வியப்புடன் பார்த்தனர்.
இது குறித்து நிருபர்கள் அவரிடம் விவேகானந்தம் கேட்ட போது,
தேர்தலில் ஓட்டு வாங்க வேட்பாளர்கள் மக்களுக்கு வாக்குறுதி கொடுக்கின்றனர். ஆனால், தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு வாக்குறுதிகளை மறந்து மக்கள் காதில் பூ சுற்றி விடுகின்றனர்.
நான் அது போல் செய்ய மாட்டேன். அதனால் தான் காதில் பூ சுற்றி வந்து வேட்பு மனு தாக்கல் செய்தேன். நான் வெற்றி பெற்றால் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சேவை செய்வேன் என்றார்.












Click it and Unblock the Notifications