அமைச்சரை திருப்பி அனுப்பிய கமுதி மக்கள்
கமுதி: ராமநாதபுரம் திமுக வேட்பாளர் ரித்தீசுக்கு ஆதரவாக கமுதியில் பிரசாரம் செய்யச் சென்ற திமுக அமைச்சர் சுப தங்கவேலனை மக்கள் முற்றுகையிட்டு திருப்பி அனுப்பினர்.
ராமநாதபுரத்தில் தனது தம்பிக்கு சீட் பெற முயன்றார் தங்கவேலன். ஆனால், அழகிரியின் உதவியோடு இந்த சீட்டைப் பிடித்துவிட்டார் ரித்தீஷ். இத்தனைக்கும் தங்கவேலனுக்கு ரித்தீஷ் பேரன் முறை.
முதல்வர் கருணாநிதியிடம், என் தம்பிக்கு சீட் தராவிட்டாலும் பரவாயில்லை.. ரித்தீசுக்குத் தராதீர்கள் என்று சொல்லிப் பார்த்தார் தங்கவேலன். ஆனால், இந்த எதிர்ப்பையெல்லாம் மீறி சீட் வாங்கிவிட்டார் ரித்தீஷ்.
இதையடுத்து பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கினார் தங்கவேலன். ஆனால், அமைச்சர் பதவியில் இருக்கனுமா வேணாமா என்று கேட்டு அவரை அழகிரி வாட்டி எடுத்ததையடுத்து வேண்டா வெறுப்பாக ரித்தீசுக்காக பிரச்சாரத்தில் இறங்கினார் தங்கவேலன்.
இந்நிலையில் நேற்று ரித்தீஷ் கமுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அவருடன் தங்கவேலன், பேரூராட்சி தலைவர் அம்பலம், வேளாண்மை விற்பனை குழு தலைவர் வேல்ச்சாமி ஆகியோர் உடன் சென்றனர்.
கமுதியில் நாடார் உறவின் முறை அமைப்பினர் தங்கவேலனை வழி மறித்து இந்தப் பகுதிக்கு தங்கவேலன் எந்தப் பணியையும் செய்வில்லை என்று கூறி முற்றுகையிட்டனர். அவரை பிரசாரம் செய்யவிடாமல் திருப்பி அனுப்பினர்.
இதையடுத்து ரித்தீஷ் மட்டும் கமுதி நாடார் உறவின்முறை மகமைக்கு சென்று அவர்களிடையே பேசினார். அவர் பேசுகையில், பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் இதைச் செய்வேன், அதைச் செய்வோம் என்று கூறி ஏமாற்றி வருகின்றனர். மக்களை ரொம்ப நாள் ஏமாற்ற முடியாது.
நான் நீங்கள் விரும்பும் வகையில் திட்டங்களை நிறைவேற்றித் தருவேன். தயவு செய்து ஓட்டு போடுங்கள் என்றார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications