அமெரிக்க அணு ஒப்பந்தம்: மாற்றுவது கடினம்-அத்வானி
பெங்களூர்: அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மாற்றுவது கடினம். பாஜக ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவின் நட்பு நாடாக பழகும் என அக்கட்சியின் பிரதம வேட்பாளர் அத்வானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெங்களூரில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
மத்திய அரசு என்பது தொடர்ச்சியான ஒன்று. முந்தைய அரசு செய்து கொண்ட ஒப்பந்தங்களை அதற்கு பி்ன்னர் வரும் அரசு மாற்றுவது என்பது கடினமான காரியம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை மனதில் வைத்து முடிவெடுப்போம்.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் மாற்றப்படுமா என்பதை இப்போது சொல்ல முடியாது. இது இரு நாடுகளுக்கு இடையே செய்து கொள்ளப்பட்ட சர்வதேச ஒப்பந்தம். ஆட்சிக்கு வந்த பின்னர் தான் இது குறி்த்து முடிவு செய்ய முடியும். அமெரிக்காவுடன் சுமூக உறவு வைத்து கொள்ளப்படும் என்றார் அத்வானி.
பாஜகவின் கொள்கைகளில் ஒன்றான அணுசக்தி ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதற்கு எதிராக அதன் பிரதம வேட்பாளர் அத்வானி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா அளித்த விளக்கம்,
அணுசக்தி ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்படும் என்பதை நாங்கள் பலமுறை உறுதிப்பட கூறியுள்ளோம். அத்வானியும் அது கடினம் என்று தான் சொல்லி உள்ளார். மறுபரிசீலனை செய்ய மாட்டோம் என கூறவில்லை என்றார்.
முன்னதாக பெங்களூரில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜாபர் ஷெரீப்பின் வீட்டுக்குச் சென்ற அத்வானி, ஷெரீப்பின் மகன் மறைந்தது குறித்து கேட்டறிந்தார். ஷெரீப் குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறினார்.
தமிழகம் வரும் அத்வானி:
இந் நிலையில் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வருகிறார்.
இது குறித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால் சிறுபான்மை மக்கள் ஆதரவு எங்களுக்கு இருக்காது என்பது சரியல்ல. இது தொடர்பாக கட்சி தேர்தல் அறிக்கையில் விரிவாக சொல்லியுள்ளோம். சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக நாங்கள் இருப்போம்.
வட மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் முடிந்த பிறகு எங்கள் கூட்டணிக்கு ஆதரவாக அத்வானியை தமிழகத்திற்கு அழைத்து வர உள்ளோம். நெல்லையில் அத்வானி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications