முழு அடைப்பு-அதிமுக, விஜய்காந்த் புறக்கணிப்பு-பிரசாரம் நடக்கும்!
சென்னை: போர் நிறுத்தம் செய்யுங்கள் என்று உலகமே கேட்கும் இந்த சமயத்தில் கூட வேலை நிறுத்தம் செய்யுங்கள் என்கிறார் கருணாநிதி. இதில் அதிமுக கலந்து கொள்ளாது. அதிமுக தேர்தல் பிரசாரம் வழக்கம் போல நடைபெறும் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், போர் நிறுத்தம் செய்யுங்கள் என்று உலகமே கேட்கும் இந்த நேரத்தில் கூட, வேலை நிறுத்தம் செய்யுங்கள்'' என்று இங்கே முதல்வர் கருணாநிதி மீண்டும் ஒர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
கருணாநிதியின் வேலை நிறுத்த அறிவிப்பு உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டிருக்கிறது. பல தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் பொது வேலை நிறுத்தங்களை சட்ட விரோதம் என்றும் அறிவித்திருக்கிறது.
வேலை நிறுத்தம் போர் நிறுத்தத்திற்கு வழி செய்யுமா? இலங்கையில் மடிந்து கொண்டிருக்கும் தமிழர்களை எண்ணி தமிழ் நாட்டில் கலங்கி நிற்கும் தமிழர்களுக்கு மேலும் பல இழப்புகளையும், இடைஞ்சல்களையும் தான் பொது வேலை நிறுத்தம் தரும். இந்த வேலை நிறுத்த அறிவிப்பு வெற்று வெளிவேடம்.
எனவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
அனைவரும் பங்கேற்க திருமா. அழைப்பு..
இதற்கிடையே இலங்கையில் போர் நிறுத்தம் கோரி நாளை நடைபெறும் பொதுவேலை நிறுத்ததிற்கு கட்சி பாகுபாடின்றி அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், போர் நிறுத்தம் ஏற்படக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.
தேர்தலைக் கூட பொருட்படுத்தாமல், முதல்வர் கருணாநிதி இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட அழைப்பு விடுத்துள்ளது ஆறுதலான விஷயம்.
எனவே அரசியல் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் செயல்படும் வகையில் கட்சி வேறுபாடுகளை கடந்து அனைவரும் பொது வேலை நிறுத்ததில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
பங்கேற்க மாட்டோம்: விஜயகாந்த்
இதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் வேலைநிறுத்தப் போராட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசை வற்புறுத்தி வரும் 23-4-09 வியாழக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக நடத்தப்படும் ஒரு கண்துடைப்பு வேலை.
எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் தான் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பார்கள். ஆட்சியில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய இடத்தில் இருப்பதால் அவர்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டிய அவசியமில்லை.
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி நடத்தும் தி.மு.க. தலைவர் கலைஞர் நடத்தும் இந்த அரசியல் ஸ்டண்டில் தே.மு.தி.க. பங்கேற்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டு மக்களும், பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களும் உலகமெல்லாம் கவலையோடு போராடும் தமிழர்களும் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். வழக்கம் போல் கழகத் தோழர்கள் தேர்தல் பணியில் ஈடுபட கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மதிமுக, இடதுசாரிகளும் புறக்கணிப்பு..
அதேபோல, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் வேலைநிறுத்தப் போராட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் வேலைநிறுத்தப் புறக்கணிப்பை அறிவித்துள்ளன.
இந்த வேலை நிறுத்தம் ஒரு அப்பட்டமான கபட நாடகம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
பெண்கள் கூட்டமைப்பும் எதி்ர்ப்பு:
அதே போல ஈழ மக்களுக்கான பெண்கள் கூட்டமைப்பும் இந்த வேலை நிறுத்தம் ஒரு திசை திருப்பல் என்று கூறியுள்ளது. இந்த அமைப்பின் பெண்கள் தான் சென்னையில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாமக இன்னும் தனது கருத்தை வெளியிடவில்லை.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications