காங்கிரஸ் வேட்பாளரை அடித்து, உதைத்த திமுக செயலாளர்!

கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கே.எஸ்.அழகிரி போட்டியிடுகிறார்.
பண்ருட்டியில் இவருக்காக அண்ணா கிராம ஒன்றிய திமுக செயலாளர் வெங்கட்ராமன் தலைமையில் திமுகவினர் பிரச்சாரத்துக்குச் சென்றனர்.
வேட்பாளர் அழகிரியும் காங்கிரஸ் தொண்டர்களுடன் வந்து இவர்களுடன் பிரச்சாரத்துக்குச் அழைத்துச் சென்றார்.
அப்போது அழகிரிக்கும் வெங்கட்ராமனுக்கும் இடையே தேர்தல் செலவு விஷயத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இது திடீரென கைகலப்பாக மாறியது.
அப்போது நடு ரோட்டில் காங்கிரஸ் வேட்பாளர் அழகிரியை சட்டையை பிடித்து இழுத்து அடித்து உதைத்தார் திமுக ஒன்றியச் செயலாளர் வெங்கட்ராமன்.
இதையடுத்து அங்கிருந்த திமுக மற்றும் காங்கிரசை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தொண்டர்களுக்கு இடையிலும் அடிதடி ஏற்பட்டது. சென்னை-கும்பகோணம் சாலையில் ஒருவரை ஒருவர் விரட்டி விரட்டி அடித்துக் கொண்டனர். வேட்டிகளை உருவிக் கொண்டு அரை நிர்வாணமாக அடிதடி நடந்தது.
இந்த விவகாரத்தால் ஒரு மணி நேரத்திற்கு அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த மோதலில் பலருக்கும் ரத்தக் காயம் ஏற்பட்டது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அருளரசு இரு தரப்பிடமும் பேசி சமாதானம் செய்தார்.
அப்போது வெங்கட்ராமன், காங்கிரஸ் வேட்பாளர் அழகிரியை நடுரோட்டில் வைத்து கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்து விட்டு சென்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications