தேர்தல் ஊழியர்களை மிரட்டிய அதிமுகவினர் மீது புகார்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தேர்தல் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருந்த போஸ்டர்களை அகற்ற முயன்ற தேர்தல் பணி ஊழியர்களை மிரட்டிய அதிமுகவினர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி சாலையில் குரூஸ்பர்னாந்து சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான குளியலறை சுவற்றில் அதிமுக போஸ்டர் ஓட்டப்பட்டிருந்தது. தேர்தல் நேரம் என்பதால் அரசு சுவர்களில் கட்சி விளம்பரம் மற்றும் போஸ்டர் ஒட்ட தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
இதனால் மாநகராட்சி அலுவலர்கள் அரசு சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காலை மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர்கள் ஆறுமுகம், நாகராஜன், காந்திமதி, அலுவலக உதவியாளர் சந்தனராஜ், சொக்கலிங்கம், கிருஷ்ணன் ஆகியோர் குளியலறை சுவரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை கிழித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த நகர அதி்முக செயலாளர் ஹென்றி உள்ளிட்ட சிலர் ஒட்டிய போஸ்டர்களை கிழித்த அதிகாரிகளை மிரட்டியதோடு கிழித்த போஸ்டர்களை அதே இடத்தில் ஒட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர்.
இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிலர் அலுவலர்களை பின்புறமாக இருந்து தள்ளிவிட்டனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் நடந்த இந்த சம்பவத்தை ஏராளமானோர் வேடிக்கை பார்த்தனர்.
எனவே வேறு வழி இல்லாததால் அதிகாரிகள் மீண்டும் அதே இடத்தில் போ்ஸ்டர்களை ஒட்டினர். இதனால் அவமானம் அடைந்த ஊழியர்கள் தூத்துக்குடி கோட்டாசியர் வேலாயுதத்திடம் புகார் தெரிவித்தனர்.
அவர் தேர்தல் பணியில ஊழியர்களை மிரட்டியவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் அலுவலரான கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். மேலும் இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் லட்சுமி மத்திய பாகம் போலீசில் புகார் செய்தார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications