மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் சுறுசுறு பிரசாரம்
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: முதுகுளத்தூர் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் சலிமுல்லாகான் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.
முதுகுளத்தூர் ஒன்றியம் கிருஸ்ணாபுரம், தணிச்சியம், ஒடைக்குளம், கிடாரம், மாரியுர், உப்பிலான், பேரையுர், முதுகுளத்தூர், முஸ்தபாபுரம், காக்கூர், தேரிருவேலி, காரையேந்தல் ஆகிய ஊர்களில் உள்ள ஜமாத்துகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
வேட்பாளர் சலிமுல்லா கானுடன், மாநில பேச்சாளர் கோவை செய்யது , தமுமுக மாநில பொருளாளர் ஓ.யு.ரஹ்மத்துல்லா மற்றும் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
தொகுதியில், சாலை வசதி, மின்சார வசதி, குடிதண்ணிர் மற்றும் மருத்துவ வசதி செய்துகொடுப்பதாக வாக்குறுதி அளித்தார் சலிமுல்லாகான்.












Click it and Unblock the Notifications