தமிழகத்திலேயே பணக்கார வேட்பாளர் சாருபாலா!

சாருபாலா தொண்டமான் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர். புதுக்கோட்டை சமஸ்தானம்தான் இவரது சொந்த ஊர். திருச்சி காங்கிரஸ் வேட்பாளராக சாருபாலா நிறுத்தப்பட்டுள்ளார்.
இவர் தனது சொத்து மதிப்பு ரூ. 56.62 கோடி என காட்டியுள்ளார்.
இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்த எந்த வேட்பாளருக்கும் இந்த அளவுக்கு சொத்து இல்லை.
மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சொத்து மதிப்பு ரூ. 27 கோடியாகும். அதேபோல கோவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.பிரபுவிடம் மட்டுமே பி.எம்.டபிள்யூ கார் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேயர் பதவி ராஜினாமா:
இதற்கிடையே தனது திருச்சி மாநகராட்சி மேயர் பதவியை சாருபாலா தொண்டைமான் ராஜினாமா செய்துள்ளார். தேர்தல் போட்டியிடுவதால் தனது மேயர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.
10 ஆயிரம் 1 ரூபாய் நாணயங்களுடன் தந்த வேட்பாளர்:
இதற்கிடையே தென்சென்னையி்ல் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வைப்பு தொகைக்கான ரூ. 10 ஆயிரத்தையும் 1 ரூபாய் நாணயங்களாக கொண்டு வந்த பரபரப்பை ஏற்படுத்தினர். அவர் கொண்டு வந்த பணத்தை தேர்தல் அதிகாரிகள் சுமார் ஒன்றரை மணி நேரம் உட்கார்ந்து எண்ணினர்.
சென்னை மந்தவெளி ஆர்கே நகரை சேர்ந்த தேவதாஸ் (50), விஜயகாந்தின் தீவிர ரசிகர். தேமுதிக துவக்கப்பட்டதும் அக்கட்சியில் இணைந்தார்.
டிராவல்ஸ் ஏஜன்சி நடத்திவரும் இவர் நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவில் எப்படியும் சீட் வாங்கிவிட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும் போது மற்றவர்களை விட வித்தியாசமாக செயல்பட்டு தொகுதியில் பிரபலமாக வேண்டும் என நினைத்தார்.
இதையடுத்து கடந்த மூன்று ஆண்டுகளாக 1 ரூபாய் நாணயங்களை சேர்க்க ஆரம்பித்தார். இந்நிலையில் தேமுதிகவில் இவருக்கு சீட் தரப்படவில்லை. இதனால் மனம் நொந்துபோன தேவதாஸ் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்தார்.
தான் சேர்த்து வைத்த 10 ஆயிரம் 1 ரூபாய் நாணயங்களை 6 பித்தளை குடங்களில் வைத்து வீட்டில் யாகம் நடத்தினார். பின்னர் நேற்று அவர் அந்த குடங்களை தூக்கி கொண்டு தனது ஆதரவாளர்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
வேட்பாளர் ஒருவர் வைப்பு தொகை ரூ. 10 ஆயிரத்தையும் 1 ரூபாய் நாணயங்களாக கொண்டு வந்ததை அடுத்து தேர்தல் அதிகாரி அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் 6 குடங்களில் இருந்த நாணயங்களையும் மேஜையில் கொட்டினர். அதை அங்கிருந்த தேர்தல் அதிகாரிகள் 6 பேர் சுமார் ஒன்றரை மணி நேரம் வரை எண்ணினார்கள். இறுதியில் அதில் 9850, 1 ரூபாய் நாணயங்கள் மட்டுமே இருந்தன.
இந்த தகவல் வேட்பாளரிடம் தெரிவிக்கப்பட்டது. அந்த நாணயங்கள் வரும் வழியில் கீழே விழுந்திருக்கலாம் எனக் கூறிய அவர் ரூ.150 செலுத்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications