தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் முடிந்தது-தென்காசியில் 3 காங். மாற்று வேட்பாளர்கள்!

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் மே மாதம் 13ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 17ம் தேதி தொடங்கியது.
நேற்று வரை 744 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் இன்று 40 பேர் மனு தாக்கல் செய்தனர். மனு தாக்கல் செய்துள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் சுயேச்சைகளே.
இன்று மாலை 3 மணியுடன் மனு தாக்கல் செய்வது முடிவுக்கு வந்தது.
25ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடு்த்துக் கொள்ளப்படும். மனுக்களைத் திரும்ப பெற 27ம் தேதி கடைசி நாளாகும். அன்றே இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும்.
அடுத்த மாதம் 13ம் தேதி வாக்குப் பதிவு நடக்கும், 18ம் தேதி நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
தென்காசியில் 3 காங். மாற்று வேட்பாளர்கள்!:
இந் நிலையில் தென்காசி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் 3 மாற்று வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். தென்காசி தொகுதி காங்கிரஸ் அதிகாரப்பூர்வ வேட்பாளரான வெள்ளைப்பாண்டி மனு தாக்கல் செய்தார்.
ஆனால் அவர் பஞ்சாயத்து தலைவர் பதவியையும், பள்ளி ஆசிரியர் பதவியையும் ஒரே நேரத்தில் வகித்த குற்றத்துக்காக அவரது மனு தள்ளுபடி செய்யப்படலாம் என்று கூறப்பட்டதால் அவருக்கு மாற்று வேட்பாளராக 3 பேரை மனு தாக்கல் செய்யுமாறு தலைமை உத்தரவிட்டது. இதையடுத்து 3 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications