மனசாட்சியுடன் ஓட்டு போடுங்கள்-ஜெயலலிதா
மதுரை: மதுரை மக்களே, மனசாட்சியுடன் ஓட்டு போடுங்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார்.
மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பி்ல் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மோகனை ஆதரித்து நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,
இந்த தினத்தை மதுரை மக்களால் மறக்க முடியுமா?. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி 1997ம் ஆண்டு இதே நாளில் வன்முறை கும்பலால் வெட்டப்பட்டு துடிக்க துடிக்க இறந்தார்.
மதுரை மக்களே, மனசாட்சியுடன் ஓட்டு போடுங்கள். லீலாவதியின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க மோகனை வெற்றி பெற செய்யுங்கள்.
மதுரையில் வருகிற 9ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் மிகப்பெரிய விழா நடக்கவுள்ளது. அந்த சமயத்தில் பெரிய அளவில் வன்முறையை கட்டவிழ்த்துவிட திமுகவினர் சதித் திட்டம் தீட்டியுள்ளனர். அந்த கலவரத்துக்கு பிறகு மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள். கள்ள ஓட்டுக்களை போட்டு விடலாம் என்று ரகசிய திட்டம் தீட்டியுள்ளனர்.
முன்னால் முதல்வர் என்ற முறையில் காவல் துறையினருக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். போலீசார் தங்கள் கடமையை செய்து திமுகவினரின் சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டும். எக் காரணம் கொண்டும் வன்முறையை அனுமதிக்கக் கூடாது என்று போலீசாரை கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications