அழகிரி-ரூ19 கோடி சொத்து: தயாநிதி-வெறும் ரூ3.5 கோடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரை தொகுதியில் போட்டியிடும் மு.க.அழகிரி தனக்கு ரூ. 19.43 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதியிடம் ரூ. 3.55 கோடி மட்டுமே சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.க.அழகிரியின் சொத்து விவரம்..

ரொக்கக் கையிருப்பு - ரூ. 1 லட்சம். மனைவியிடம் ரூ. 50 ஆயிரம். மகனிடம் ரூ. 25 ஆயிரம்.

வங்கி முதலீடுகள் - அழகிரிக்கு ரூ. 6.5 கோடி, மனைவிக்கு ரூ. 67.4 லட்சம், மகனிடம் ரூ. 2.3 கோடி.

நிதி நிறுவன முதலீடுகள் - அழகிரி ரூ. 96 லட்சம், மனைவியிடம் ரூ. 83.3 லட்சம், மகனிடம் ரூ. 1.06 கோடி.

நகைகள் - ரூ. 1.10 லட்சம் மதிப்பிலான 85 கிராம், மனைவியிடம் 9.10 லட்சம் மதிப்பிலான 700 கிராம், மகனிடம் ரூ. 65 ஆயிரம் மதிப்பிலான 50 கிராம்.

வாகனங்கள் - ரூ. 1.4 லட்சம் மதிப்பிலான ஹோன்டா சிட்டி, 1.2 லட்சம் மதிப்பிலான லேன்ட்ரோவர், மனைவியிடம் ரூ. 5.33 லட்சம் மதிப்பிலான டயோட்டா இன்னோவா, மகனிடம் ரூ. 7 லட்சம் மதிப்பிலான ஸ்கோடா சூப்பர்.

அசையா சொத்துக்கள்

ரூ. 2.58 கோடி மதிப்பிலான விவசாய நிலம், மனைவிக்கு ரூ. 1.27 கோடி மதிப்பிலான விவசாய நிலம், மகனிடம் ரூ. 1.24 கோடி மதிப்பிலான விவசாய நிலம்.

வீடுகள்

மதுரை - ரூ. 60 லட்சம்.
அடுக்குமாடிக் குடியிருப்பு - ரூ. 34 லட்சம்.
ரூ. 2.09 கோடி மதிப்பிலான வர்த்தக கட்டடங்கள், பிளாட்டுகள்.

(மகனுக்கு) சென்னை பண்ணை இல்லம் மற்றும் பிற - மதிப்பு ரூ. 3.27 கோடி.

மொத்த சொத்து மதிப்பு - ரூ. 19.43 கோடி.

தயாநிதி மாறன் சொத்து விவரம்

ரொக்க்க கையிருப்பு - ரூ. 49,711. மனைவியிடம் ரூ. 17,699.

வங்கி முதலீடுகள் - ரூ. 1.85 கோடி, மனைவியிடம் ரூ. 27.14 லட்சம், குழந்தைகள் பெயரில் ரூ. 6.35 லட்சம்.

நிதி நிறுவன முதலீடுகள்

ரூ. 27.14 லட்சம், மனைவி பெயரில் ரூ. 3.68 லட்சம்.

நகைகள்

ரூ. 59,010 மதிப்பிலான 42 கிராம் தங்க நகை.
மனைவியிடம் ரூ. 52.15 லட்சம் மதிப்பில் 1745 கிராம் தங்க நகை, 18 கிலோ வெள்ளி, குழந்தைகள் பெயரில் 17.37 லட்சம் மதிப்பிலான 1205 கிராம் தங்க நகைகள்.

வாகனங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் இ240, மாருதி ஜிப்சி, டயோட்டா இன்னோவா.

பிற சொத்துக்கள்

முரசொலி மாறன் அறக்கட்டளையில் ரூ. 8.80 லட்சம், மனைவியிடம் ரூ. 11 லட்சம், குழந்தைகள் பெயரில் ரூ. 7.34 லட்சம் சொத்து.

அஞ்சுகம் குடும்ப அறக்கட்டளையில் ரூ. 54 ஆயிரத்து 332 பங்கு, மல்லிகா மாறன் நல அறக்கட்டளையில் ரூ. 12,000 பங்கு. மனைவி பெயரில் பிற அசையும் சொத்துக்கள் ரூ. 13.90 லட்சம் மதிப்பில்.

தயாநிதி மாறன் பெயரி்ல் அசையா சொத்து எதுவும் இல்லை.

மொத்த சொத்து மதிப்பு ரூ. 3.55 கோடி.

நெல்லை காங். வேட்பாளர் ராமசுப்புக்கு ரூ.1.64 கோடி:

நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராமசுப்புவிடம் ரூ. 1.64 கோடி சொத்துக்கள் உள்ளதாம்.

அவரது பெயரில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கம், மனைவி பெயரில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 450 ரொக்கம், ரூ.13 ஆயிரம் சேமிப்பு பத்திரம், தனது பெயரிலும், மனைவி பெயரிலும் ரூ.1 கோடியோ 62 லட்சத்து 18 ஆயிரத்து 917 மதிப்பில் 12 லாரிகள், ஜேசிபிகள், 3 கார்கள், 3 பைக்குகள், 9 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பில் 82 பவுன் நகைகள், உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவரது சொத்துகளின் மதிப்பு ரூ.1.64 கோடியாகும்.

வெள்ளப்பாண்டி சொத்து..

தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வெள்ளபாண்டிக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கம், ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் எல்ஐசி பாலிசி, செந்தட்டியாபுரத்தில் பெற்றோர் பெயரில் ரூ.10 லட்சம் மதிப்பில் 2 வீடு ஆகியவை உள்ளன. கார், வாகனம் எதுவும் இல்லை.

டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ரூ.2.44 கோடி சொத்து

புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் 4வது முறையாக போட்டியிடுகிறார். இவர் தனது பெயரிலும், மனைவி டாக்டர் சந்திரிகா, மகன் ஷியாம் ஆகியோர் பெயரிலும் சொத்துகள், வங்கி முதலிடுகள் இருப்பதாக அபிடவிட்டில் தெரிவித்துள்ளார்.

ரொக்கப் பணமாக ரூ.3.75 லட்சம், வங்கியில் டெபாசிட்டுகள் மற்றும் பங்கு முதலீட்டுகள் ரூ.8 லட்சத்து 10 ஆயிரத்து 551, ரூ.5 லட்சத்து 56 ஆயிரத்து 922 மதிப்பிலான 1153 கிராம் நகைகள், பிற சொத்துகள் மூலம் ரூ.12 லட்சம் வருமானம், உடுமலைபேட்டை, கோவையில் ரூ.57 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பில் 533 மதி்ப்பிலான 49 ஏக்கர் விவசாய நிலங்கள், கோவை குனியாமுத்தூரில் ரூ.34 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் வேளாண் அல்லாத நிலங்கள், ரூ.50 லட்சத்து 47 ஆயிரத்து 899 மதி்ப்பிலான வீடு, வணிக வாளகங்கள், கோவை மற்றும் சென்னையில் ரூ.72 லட்சத்து 89 ஆயிரத்து 288 மதிப்பிலான வீடு மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளன. இந்த சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.2 கோடியோ 44 லட்சத்து 96 ஆயிரத்து 193 ஆகும்.

வேறு கடன்கள் எதுவும் இல்லை என்றும், கடந்த ஆண்டு வரை வருமான வரி செலுத்தி உள்ளதாகவும் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+