தா.பாண்டியன் வேட்பு மனு நிறுத்தி வைப்பு - பரபரப்பு

அதிமுக கூட்டணியின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக தா.பாண்டியன் வட சென்னை தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். இங்கு திமுக சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.
இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தா.பாண்டியனின் வேட்பு மனு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை வட சென்னை தொகுதி தேர்தல் அதிகாரியான மைதிலி ராஜேந்திரனிடம் திமுக வழக்கறிஞர் ஜோதி (அதிமுகவிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு திமுகவுக்குத் தாவியர்) ஒரு மனு ஒன்றைக் கொடுத்தார்.
அதில், தா.பாண்டியன் தனது வேட்பு மனுவில் முழுமையான சொத்து விவரங்களை தெரிவிக்கவில்லை. பூர்வீக சொத்துக்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். புதிதாக வாங்கிய சொத்து விவரங்களை தெரிவிக்கவில்லை.
எனவே, அவரது மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து தா.பாண்டியனின் வேட்பு மனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மைதிலி ராஜேந்திரன் அறிவித்தார்.
இத்தகவல் தா.பாண்டியனுக்குப் பறந்தது. உடனடியாக அவர் கலெக்டர் அலுவலகத்துக்கு விரைந்து வந்தார்.
அவரிடம் தேர்தல் பார்வையாளர் சுனில்குமார், பாலி, சுக்லா ஆகியோர், மைதிலி ராஜேந்திரன் முன்னிலையில் விசாரணை நடத்தினார்கள். தா. பாண்டியன் விளக்கம் அளித்தார்.
தா.பாண்டியனின் வேட்பு மனுவை ஏற்பதா, நிராகரிப்பா என்பது குறித்து திங்கள்கிழமை முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே தா.பாண்டியன் போட்டியிடுவாரா, இல்லையா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த திடீர் திருப்பத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications