For Daily Alerts
Just In
ஐசிஐசிஐயின் லாபம் 10 சதவீதம் குறைந்தது
மார்ச் 31-ம் தேதியோடு முடிவடைந்த ஆண்டுக்கான இந்த வங்கியின் லாபம் ரூ.3758 கோடி. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு இந்த வங்கி ரூ.4158 கோடி லாபம் ஈட்டியிருந்தது.
அதேநேரம் இந்த வங்கிதான் வட்டி மூலம் அதிக வருவாய் ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு வட்டி மூலம் மட்டுமே ரூ.7,304 கோடி ஈட்டிய ஐசிஐசிஐ, நடப்பு ஆண்டில் ரூ.8,367 கோடி சம்பாதித்துள்ளது. இது 15 சதவிகிதம் அதிகமாகும்.
இந்த ஆண்டு தனது பங்குதாரர்களின் பங்கு ஒன்றுக்கு ரூ.11 வீதம் டிவிடெண்டும் அறிவித்துள்ளது ஐசிஐசிஐ. கடந்த ஆண்டும் இதே அளவுதான் டிவிடெண்ட் வழங்கப்பட்டது.
Comments
Story first published: Sunday, April 26, 2009, 15:09 [IST]