பிரமிட் சாய்மிராவின் 'ஃபிராடுகள்': செபி வெளியிடும் திடுக் தகவல்கள்

பிரமிட் சாய்மிரா இயக்குநர்களில் ஒருவர், ஒரு முன்னணி பத்திரிகையின் மூத்த நிருபர் ஆகியோருக்கு இந்த மோசடியில் பெரும் பங்கிருப்பதாக செபி தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளது செபி. பிரமிட் சாய்மிராவின் புரமோட்டர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய 250 நிறுவனங்கள் உடனடியாக பங்கு வர்த்தகத்திலிருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
பிரமிட் சாய்மிராவின் பங்குகளும் வர்த்தகத்திலிருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பர் 22-ம் தேதியே இந்த மோசடி அம்பலமானது. செபியின் புலனாய்வு விசாரணையின்படி, பிரமிட் சாய்மிராவின் புரமோட்டர்கள் மற்றும் சில நிறுவனங்கள் சேர்ந்து வேண்டுமென்றே இந்த நிறுவனப் பங்குகளின் மீது பல்க் ட்ரேடிங் முறையில் மொத்தமாக வாங்கி விற்று, போலியான தேவையை ஏற்படுத்தியுள்ளன.
இதன் மூலம் இந்த பங்குகளுக்கு 10 சதவிகிதம் வரை மதிப்பை உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஒரு முன்னணி வர்த்தக நாளிதழின் மூத்த நிருபருக்கும் தொடர்பு இருப்பது அவர்கள் செல்போன் உரையாடல் மூலம் தெரிய வந்துள்ளது.
இன்னும் சில தினங்களில் பிரமிட் சாய்மிரா முற்றிலுமாக செபியிலிருந்து விலக்கப்படும் என்றும், மத்திய அமலாக்கத் துறை மற்றும் மும்பை போலீஸ் இணைந்து பிரமிட் சாய்மிரா மீது நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications
