இங்கிலாந்து-பிரான்ஸ்-ஸ்வீடன் அமைச்சர்கள் இலங்கை விரைவு
கொழும்பு: இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும், அப்பாவி மக்களைக் கொல்லக் கூடாது என்று இலங்கை அரசை நேரில் வலியுறுத்துவதற்காக 3 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கொழும்பு விரைகின்றனர்.
இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட், பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் பெர்னார்ட் கொச்னார், ஸ்வீடன் வெளியுறவு அமைச்சர்ச சார்ல் பில்ரிஸ்ட் ஆகியோர் நாளை மறு நாள் கொழும்பு வருகின்றனர்.
பட்டினிச் சாவை சந்தித்துள்ள அப்பாவித் தமிழர்களைக் காக்கவும், போர் பகுதியிலிருந்து ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்புடன் வெளியேற்றவும் இலங்கை அரசை இவர்கள் நேரில் வலியுறுத்தவுள்ளனர்.
இந்த நிலையில்,டேவிட் மிலிபான்ட் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், மோதல் நடைபெறும் பகுதிகளில் பொதுமக்களுடைய உயிரிழப்புக்கள் பெருமளவுக்கு அதிகரித்து வருவதால் இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் பெரும் கவலை அடைந்துள்ளார். போர் நிறுத்தம் அவசியம் என்பதை அவர் இலங்கை அரசுக்கு மீண்டும் வலியுறுத்தியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் இன்று முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதத்தை முன் வைத்து மத்திய அரசு கொடுத்த நெருக்கடியால் தாற்காலிகமாக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது இலங்கை.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications