பஸ்களை நிறுத்தல், கடைகளை மூடுதல் கூடாது-கருணாநிதி
சென்னை: தமிழகம் முழுவதும் பஸ்களை நிறுத்துதல், கடைகளை மூடச் சொல்லுதல் போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து உண்ணாவிரத மேடையில் படுத்தபடியே அவர் பேசுகையில், இலங்கையில் போர் நிறுத்தம் வர வேண்டும், அப்பாவித் தமிழர்கள் காக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில்தான் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கிறேன்.
இந்த சமயத்தில் கடைகளை மூடச் சொல்லுதல், பஸ்களை நிறுத்தச் சொல்லுதல், தாக்குதல் போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது.
நமக்கும், நமது அரசுக்கும், திமுகவுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்த சிலவிஷமிகள் இத்தகைய செயலில் ஈடுபடக் கூடும்.
பஸ்கள் இயல்பாக ஓடிக் கொண்டிருக்கட்டும், கடைகள் இயல்பாக நடந்து கொண்டிருக்கட்டும். யாரும் அவற்ற நிறுத்தவோ, மூடச் சொல்லவோ கூடாது என்று தமிழ் மக்களை, பொதுமக்களை, சகோதர, சகோதரிகளை, தாய்மார்களை, இளைஞர்களை, மாணவர்களை தாழ்பணிந்து கேட்டுக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications