1000 நானோ கார்களுக்கு ஆர்டர் கொடுத்த நிறுவனம்
கொல்கத்தா: கொல்கத்தாவை சேர்ந்த ஸ்ரீ சிமென்ட்ஸ் நிறுவனம் ஆயிரம் டாடா நானோ கார்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் இந்த கார்களை வாங்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவை சேர்ந்த ஸ்ரீ சிமென்ட்ஸ் நிறுவனம் ஆயிரம் நானோ கார்களை புக் செய்ய ரூ. 42 லட்சத்துக்கான் செக் அந்நிறுவனத்தின் டீலரிடம் கொடுத்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை இயக்குனர் பாங்கூர் கூறுகையில்,
பூமி தினத்தை முன்னிட்டு 1000 நானோ கார்கள் வாங்க ஆர்டர் கொடுத்துள்ளோம். இதில் 200 உயர் தர மாடல்களாகவும், மீத 800 நடுத்தர ரக மாடல்களாகவும் இருக்கும்.
இந்த காரின் மைலேஜூம் நன்றாக இருப்பதாக தெரியவந்துள்ளது. ஒரு இந்திய நிறுவனம் என்ற முறையில் சுற்றுப்புற சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் இந்த காரை வாங்க இருக்கிறோம். இது டாடா நிறுவனத்திடம் பேசுகையில், அவர்கள் நாங்கள் நேரடியாக தர முடியாது.
டீலர்களிடம் ஆர்டர்களை கொடுங்கள் என கூறிவிட்டது. இதையடுத்து அவர்கள் அதிக ஆர்டர்கள் கொடுத்தாலும் முன்னுரிமை தரப்படாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
கம்ப்யூட்டர் உதவியுடன் குலுக்கல் நடக்கும் என்பதால், எத்தனை கார் ஒதுக்கப்படும் என்பது பின்னர் தான் தெரியும் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications