கர்நாடக முதல்வர் எதியூரப்பா மீது செருப்பு வீச்சு
ஹசன்: கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டம் சென்னராயப்பட்டனம் என்ற இடத்தில் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் எதியூரப்பா மீது செருப்பு வீசப்பட்டது.
ஆனால் எதியூரப்பா மீது செருப்பு விழவில்லை. மேடைக்கு முன்பாகவே அது விழுந்து விட்டது. செருப்பு வீசியவரின் பெயர் சந்துரு. இவர் தேவெ கெளடா வாழ்க என்று கூறியபடி செருப்பை வீசினார்.
சந்துரு, ஹசன் மாவட்டம் ஹோலேநரசிபூர் பகுதியைச் சேர்ந்தவர். மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்தவர். அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கு முன்பு அத்வானி, ப.சிதம்பரம், மன்மோகன் சிங் ஆகியோரை நோக்கி ஷூக்கள், செருப்பு ஆகியவை வீசப்பட்டன. அந்த செயலில் ஈடுபட்டவர்களை மேற்கண்ட தலைவர்கள் மன்னித்து விட்டு விடும்படி கூறினர்.
ஆனால் எதியூரப்பா அப்படி விடவில்லை. தன்னை நோக்கி செருப்பு வீசிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
மேலும், அவர் பேசுகையில், இது ஒரு பேஷனாகி விட்டது. இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு என் மீது செருப்பு வீசியவரை கடுமையாக தண்டிப்பதுதான் ஒரே வழி என்றார் ஆவேசமாக.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications