தமிழகம், புதுவையில் 852 பேர் போட்டி - இறுதிப் பட்டியல் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் மொத்தம் 852 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நேற்று இரவு இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 13ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 17ம் தேதி தொடங்கியது. 24ம் தேதி வரை மனுக்கள் பெறப்பட்டன. மொத்தம் 1308 மனுக்கள் வந்தன

இவற்றை பரிசீலனை செய்ததில் 931 மனுக்கள் ஏற்கப்பட்டன. மற்றவை நிராகரிக்கப்பட்டன.

மனுக்களை வாபஸ் பெற நேற்று மாலை 3 மணி வரை அவகாசம் தரப்பட்டிருந்தது. இதைப் பயன்படுத்தி சுயேச்சைகள், மாற்று வேட்பாளர்கள் உள்ளிட்ட 107 பேர் வாபஸ் பெற்றனர்.

இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி இரு மாநிலங்களிலும் மொத்தம் 852 பேர் இறுதியாக களத்தில் நிற்கின்றனர். தமிழகத்தில் மட்டும் 824 பேர் போட்டியிடுகின்றனர். புதுச்சேரி தொகுதியில் 28 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

தமிழகத்தில் அதிகபட்சமாக தென் சென்னையில் 44 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நாகை தனி தொகுதியில் 7 பேரும் போட்டியில் உள்ளனர்.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடந்தது.

தொகுதி வாரியாக போட்டியிடுவோரின் எண்ணிக்கை..

திருவள்ளூர் (தனி): 14
வட சென்னை: 29
தென்சென்னை: 44
மத்திய சென்னை: 37
ஸ்ரீபெரும்புதூர்: 32
காஞ்சீபுரம் (தனி): 20
அரக்கோணம்: 20
வேலூர்: 24
கிருஷ்ணகிரி: 16
தர்மபுரி: 21
திருவண்ணாமலை: 30
ஆரணி: 13
விழுப்புரம்: 19
கள்ளக்குறிச்சி: 29
சேலம்: 23
நாமக்கல்: 25
ஈரோடு: 25
திருப்பூர்: 21
நீலகிரி (தனி): 14
கோவை: 25
பொள்ளாச்சி: 22
திண்டுக்கல்: 19
கரூர்: 38
திருச்சி: 24
பெரம்பலூர்: 21
கடலூர்: 11
சிதம்பரம் (தனி): 13
மயிலாடுதுறை: 23
நாகப்பட்டினம் (தனி): 7
தஞ்சாவூர்: 13
சிவகங்கை: 20
மதுரை: 12
தேனி: 22
விருதுநகர்: 16
ராமநாதபுரம்: 15
தூத்துக்குடி: 15
தென்காசி (தனி): 9
திருநெல்வேலி: 21
கன்னியாகுமரி: 22
புதுச்சேரி: 28

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+