அதிமுகவுக்கு தாவிய தேமுதிக மாற்று வேட்பாளர்
Subscribe to Oneindia Tamil
பொள்ளாச்சி: கோவை தொகுதி தேமுதிக வேட்பாளர் திடீரென அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னியைலி கட்சி தாவினார்.
கோவை மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் பாண்டியனுக்கு மாற்று வேட்பாளராக கட்சியால் நிறுத்தப்பட்டவர் டென்னிஸ் கோவில்பிள்ளை. இவர் வேட்பு மனுவும் தாக்கல் செய்திருந்தார்.
கோவை மாநகர் மாவட்ட தேமுதிக செயலாளராக இருந்து வந்த டென்னிஸ் கடந்த சட்டசபை தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு 37,448 ஓட்டுகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
இந் நிலையில், தேமுதிக மாற்று வேட்பாளராக தான் தாக்கல் செய்த மனுவை திடீரெந வாபஸ் பெற்ற அவர் பொள்ளாச்சிக்கு வந்த ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவுக்குத் தாவினார்.
இதையடுத்து ஜெயலலிதா பேசிய பொதுக் கூட்ட மேடையிலேயே அவர் அமர வைக்கப்பட்டு மரியாதை தரப்பட்டது.












Click it and Unblock the Notifications