ஒரே நாளில் திருச்சி வரும் கருணாநிதி, ஜெ
திருச்சி: தமிழகத்தின் இரு பெரும் தலைவர்களும், இரு பெரும் துருவங்களுமான முதல்வர் கருணாநிதியும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் மே 1ம் தேதி திருச்சி வருகின்றனர். இதையடு்த்து அங்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும் 13ம் தேதி நடக்கிறது. இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருப்பதால் தேர்தல் பிரசாரத்தில் அனல் பறக்கிறது.
திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் அக்கட்சியை சேர்ந்த ப.குமார் போட்டியிடுகிறார்.
தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா கடந்த சில நாட்களாக ஹெலிகாப்டரில் பறந்து பறந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
பிரசாரத்துக்கு நடுவே நாளை திருச்சி வரும் அவர், அங்கிருந்து தஞ்சை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூருக்கு சென்று பிரசாரம் செயகிறார். வரும் 3ம் தேதி வரை அப்பகுதிகளில் பிரசாரம் செய்யும் அவர் தினமும் இரவு தங்குவதற்கு ஹெலிகாப்டரில் திருச்சி வந்து சங்கம் ஹோட்டலில் ஓய்வெடுக்கிறார்.
இந்நிலையில் முதல்வர் கருணாநிதி உடல்நலக் கோளாறு காரணமாக முக்கிய தொகுதிகளில் மட்டும் பிரச்சாரம் செய்ய முடிவெடுத்துள்ளார். அவர் மே 1ம் தேதி திருச்சியில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
இதற்காக மலைக்கோட்டை எக்ஸ்பிரசில் ரயிலில் வரும் அவர் மாலை 6 மணிக்கு தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
மே 1ம் தேதி இரு பெரும் திராவிட கட்சிகளின் தலைவர்களும் திருச்சியில் இருப்பதால் அங்கு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
இன்பதுரை எடுத்த சுப்ரீம் ஆயுதம்? சபாநாயகர் போட்ட 5 நிமிட உத்தரவு! சுப்ரீம் கோர்ட்டில் சிக்கும் தவெக? -
தூய சக்தி என்றால் 3 எம்.எல்.ஏக்களையும் கட்சியை விட்டு நீக்கணும்.. விஜய்க்கு அன்புமணி வைத்த வேண்டுகோள் -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
சென்னையில் கால் வைத்த செங்கோட்டையன்.. அடுத்து நொடி எடப்பாடிக்கு அதிர்ச்சி.. 3 அதிமுக MLAகள் ராஜினாமா -
சிவி சண்முகத்துக்கு அடுத்த அடி. 5 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவு.. யார் இவர்கள்? லிஸ்ட் -
தலைக்கு மேல் தொங்குது கத்தி.. வேதனையில் வேலுமணி டீம்! விடாப்பிடியாய் எடப்பாடி.. விஜய் கொடுத்த ஆஃபர் -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
எடப்பாடி செய்த அந்த 3 தவறுகள்.. "முக்குலத்தோர் கோபம்.." உடைந்து சிதற போகுது கட்சி? அடுத்து என்ன -
எடப்பாடினு சொன்னாலே பயம் வரனும்.. ஹோட்டல் மீட்டிங்கில் வெடித்த இபிஎஸ்! விஜய்க்கு லட்டு போல் சான்ஸ்! -
திமுகவில் மீண்டும் ‘செயல் தலைவர்’ பதவி? களமிறக்கப்படும் உதயநிதி - கனிமொழி.. ஸ்டாலின் பிளான் என்ன? -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்!












Click it and Unblock the Notifications