Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லண்டனில் இந்திய, இலங்கை தூதரகம் சூறை - 6 தமிழர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இலங்கை தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என லண்டனில் தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது இந்திய மற்றும் இலங்கை தூதரகம் தாக்கப்பட்டது. இதில் 2 அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். 6 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் ராணுவம் அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஒன்றுகூடி போராடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தமிழக முதல்வர் கருணாநிதி திடீர் உண்ணாவிரதம் இருந்தார். இதையடுத்து மத்திய அரசு கொடுத்த நெருக்கடி காரணமாக இலங்கை போர் நிறுத்தம் செய்வதாக உறுதி கொடுத்தது.

ஆனால், அவர்கள் உண்மையில் போர் நிறுத்தம் செயயவில்லை. ஈழத்தில் தொடர்ந்து விமானங்கள் குண்டு வீசும் சத்தம் கேட்டு கொண்டிருப்பதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து உலகம் முழுவதும் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் ஒழித்து கொண்டிருக்கிறது. இங்கிலாந்தில் தமிழர்களின் ஆர்ப்பாட்டம் அந்நாட்டையே உலுக்கி வருகிறது. அங்கு தமிழர்கள் கடந்த 11ம் தேதி சுமார் 1 லட்சம் பங்கேற்ற மாபெரும் பேரணி நடத்தினர்.

அங்கு ஏப்ரல் 6ம் தேதி முதல் சில தமிழர்கள் தொடர்ந்து இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு முன்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களில் பரமேஸ்வரன் என்ற தமிழ் இளைஞர் தொடர்ந்து 21வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று லண்டனில் ஆல்ட்விச் பகுதியில் உள்ள இந்திய தூதரகத்துக்கு முன்பாக சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் இந்தியா மற்றும் இலங்கை ராணுவத்துக்கு எதிராக வாசகங்களை கொண்ட பேனர்களை ஏந்தி வந்தனர்.

இந்திய தூதரகத்தின் வாயிலில் பொருத்தப்பட்டு இருந்த குண்டு துளைக்காத கண்ணாடியை அடித்து நொறுக்கினர். அதே போல் ஹைட் பூங்கா அருகில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாகவும் போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் இரண்டு தூதரகத்திலும் விசா வழங்க வெளிப்பகுதியில் இருக்கும் கண்ணாடி கவுன்டர்களை சூறையாடிதாக தெரிகிறது.

இதில் 2 அதிகாரிகள் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார் இரு இடங்களிலும் போராட்டம் செய்தவர்களில் 6 பேரை கைது செய்தனர்.

இது குறித்து அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் ஒருவர் கூறுகையில், அவர்களை எங்களை தள்ளிவிட்டு, அலுவலகத்தின் வரவேற்பு அறைக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். இதில் கட்டிடத்தின் ஜன்னல்கள் சேதமைடந்துள்ளன. அவர்கள் மிகவும் கோபமாக காணப்பட்டார்கள் என்றார் அவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+