நீண்ட பயணம் கூடாது-கருணாநிதிக்கு டாக்டர் அறிவுரை
சென்னை: முதல்வர் கருணாநிதி நீண்ட தூர பயணம் மேற்கொள்ளக் கூடாது என டாக்டர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.
இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி கடுமையான முதுகுவலியின் காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டு அவருக்கு முதுகுத் தண்டில் அறுவை சிகிச்சை செய்த டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக்கழகத்தின் எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் அரவிந்த் ஜெய்ஸ்வால் இன்று காலையில் சென்னை வந்து கருணாநிதியின் உடல் நிலையை பரிசோதனை செய்தார்.
டாக்டர் மார்த்தாண்டம், டாக்டர் மயில்வாகனன், டாக்டர் கோபால் ஆகியோர் உடன் இருந்தனர். பரிசோதனைக்குப் பின், கருணாநிதியின் உடல்நலம் நன்றாக குணமாகி வருகிறது என்றும், தேர்தல் சுற்றுப்பயணம் செய்வதற்கேற்ற நிலையில் இருக்கிறது என்றும், ஆனால் காரில் நீண்ட தூரப் பயணத்தை அதிகமாக மேற்கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதி நான்கு ஊர்களில் மட்டும் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications