தென்காசி தொகுதியில் தேமுதிக Vs தேமுதிக!
தென்காசி: தென்காசி தொகுதி தேமுதிக வேட்பாளர் இன்பராஜை எதிர்த்து அக்கட்சியை சேர்ந்த பாலகிருஷ்ணன் சுயேட்சையாக போட்டியிடுவது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தென்காசி தொகுதி பரபரப்பானதாகவே காணப்படுகிறது. அதிமுக போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு அக்கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் திமுகவும் இதை காங்கிரசுக்கு ஒதுக்கிவிட்டு, விலகி கொண்டது.
இந்நிலையில் இங்கு ஓரளவு செல்வாக்கு கொண்ட பாஜக போட்டியிடாமல் தங்களது கூட்டணி கட்சியான சமகவிற்கு ஒதுக்கியது. ஆனால், சரத்குமார் அங்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவு தரபோவதாக முதலில் கூறினார். பின்னர் தனது முடிவை மாற்றி கொண்டு யாருக்கும் ஆதரவில்லை என்றார்.
தற்போது தேமுதிக கூட்டணியில் அக்கட்சி வேட்பாளர் இன்பராஜை எதிர்த்து போட்டி வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார். இதற்கு உட்கட்சி குழப்பம் தான் காரணம் என தெரிகிறது.
இன்பராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போதிலும் அவர் முழு நம்பிக்கை இல்லாத தேமுதிகவினர் அவருக்கு மாற்று வேட்பாளராக தேமுதிக மாவட்ட செயலாளர் செந்தில்குமார் மற்றும் பட்டதாரிகள் அணி செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரை சுயேட்சையாக கட்சி வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்தது.
இந்நிலையில் வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளான 27ம் தேதி மாற்று வேட்பாளர்கள் இருவரையும் வாபஸ் வாங்க சொல்லி கட்சி மேலிடம் கேட்டு கொண்டது.
ஆனால், மாற்று வேட்பாளர்களில் ஒருவரான பாலகிருஷ்ணன் மனுவை வாபஸ் பெறவில்லை.
மாவட்ட பட்டதாரிகள் அணி செயலாளராக இருக்கும் பாலகிருஷ்ணன் வேட்பு மனுவை வாபஸ் பெறாமல் தேமுதிக வேட்பாளரை எதிர்த்து தேமுதிக பிரமுகரான இவர் போட்டியிடுவது கட்சியிலேயே கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளதை காட்டுவதாக கூறுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications