'ஸ்வைன்': டல்லடிக்கும் உலக மார்க்கெட்!

வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகிவிடுவோம் என்ற அச்சத்தில் பயணிகள் விமானப் பயணத்தைத் தவிர்ப்பதால், விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளன.
மெக்ஸி்கோவுக்கு அடுத்தபடியாக நியூஸிலாந்திலும் இந்த நோய் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், சர்வதேச அளவில் பெரும் அச்சம் பீடித்துள்ளது.
இன்று டாவ் ஜோன்ஸில் 54 புள்ளிகள் சரிந்தது. பிரிட்டிஷ் பங்கு சந்தையில் 48 புள்ளிகளும், ஜெர்மனியின் டாக்ஸ் 81 புள்ளிகளும், பிரான்ஸின் ஸாக் 40 புள்ளிகளையும் இழந்தது.
ஆசிய சந்தைகளான ஹாங்க்செங் 418 புள்ளிகளை இழந்தது. சார்ஸ் பயத்துக்குப் பின் இந்த அளவு புள்ளிகளை மீண்டும் இழந்துள்ளது ஹாங்க்செங்.
ஜப்பானின் நிக்கி 225 புள்ளிகளை இழந்துவிட்டது.
சர்வதேச விமான நிறுவனங்களில் லுப்தான்ஸாவுக்கு 10 சதவிகித பயணிகள் வருகை குறைந்துள்ளது. பிரிட்டிஷ் ஏர்வேஸில் 7 சதவிகிதமும், கதே பஸிபிக் 8 சதவிகிதமும் பயணிகள் வருகை குறைந்துள்ளது.
பிரான்ஸ், பிரிட்டன், சுவிட்ஸர்லாந்து போன்ற நாடுகளில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துவிட்டதால் ஓட்டல்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications