'ரயிலையே கடத்தும் அளவுக்கு முன்னேறிய தமிழகம்!'
சென்னை: பைக், கார், ஆட்டோ போன்ற வாகன கடத்தல் மட்டுமே அறிந்த தமிழகம் இப்போது ஒரு ரயிலையே கடத்தும் அளவிற்கு முன்னேறியுள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் இல. கணேசன் கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
இதுநாள் வரையில் இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோ போன்ற வாகன கடத்தல் மட்டுமே அறிந்த தமிழகம், இப்போது ஒரு ரயிலையே கடத்தும் அளவிற்கு முன்னேறியுள்ளது.
ஒரு ரயிலை இயக்குவதற்கு நிபுணத்துவம் தேவை. ஆகவே, அந்த ரயிலை கடத்தியவன் ரயிலை இயக்குவதற்கான நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், அந்த விபத்தில், அவன் மரணமடைந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே, அவன் ஒரு தற்கொலைப் படையைச் சார்ந்தவனாக இருக்கலாம்.
அவனுக்கு அந்த ரயிலை இயக்குவதற்கான சாவி எப்படிக் கிடைத்தது,. ஒருவேளை அந்த சாவி ரயிலிலே விட்டுவிட்டு வந்திருந்தால், அதற்கு பொறுப்பானவர்கள் யார்?. இதற்கான விடைகளை நிச்சயம் கண்டுபிடிக்க வேண்டும்.
தமிழகம் மேம்போக்காக அமைதிப் பூங்காப் போல் தோற்றமளித்தாலும், இங்கே தீவிரவாதம் தலைதூக்குவதற்கான அறிகுறியாகவே இந்த சம்பவத்தை ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?.
இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு பாஜக சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இறந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் உரிய நிவாரணம் காலத்தே வழங்க வேண்டும்.
மேலும் தரம் குறைந்த, ஊழலில் போடப்பட்ட தண்டவாளங்களினால் ஏறத்தாழ 50க்கும் மேற்பட்ட ரயில் விபத்து சம்பவங்கள் நடைப்பெற்றுள்ளதை நினைவு கூர்ந்து, இது போன்ற சம்பவங்கள் ரயில் வண்டி தொடர் போல் இனியும் நிகழாமல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தபட வேண்டும் என்று கூறியுள்ளார் கணேசன்.
அத்வானி வழியில் கணேசன்..
இதற்கிடையே பாஜக பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானி பாணியில் இல.கணேசனும் தனக்கென தனி இணையதளத்தைத் தொடங்கி அதன் மூலம் தனது கொள்கைகள், உறுதிமொழிகள், பாஜகவின் லட்சியம் உள்ளிட்டவற்றை விளக்கி பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
www.laganesan.in என்ற பெயரிலான இந்த தளம் அட்டகாசமாக உள்ளது.
இல.கணேசன் குறித்த வாழ்க்கை குறிப்புகள், பாஜக தேர்தல் அறிக்கை, இல.கணேசனின் பேச்சுகள், பேட்டிகள், அவரது பிரசார விவரம், பத்திரிகைக குறிப்புகள், புகைப்படங்கள், வீடியோக்கள் என பலவும் அதில் இடம் பெற்றுள்ளன.
அந்தக் காலத்தைப் போல இல்லாமல் இப்போது நவீன முறையில் பிரசாரங்கள் மாறிப் போய் விட்டதால் இணையதளத்தை பாஜக முக்கிய பிரசாரக் கருவியாக தேர்ந்தெடுத்து கலக்கிக் கொண்டிருக்கிறது.
அத்வானியின் இணையதளம்தான் நாட்டிலேயே அதிக பாப்புலரான அரசியல் பிரசார இணையதளமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தமிழகத்தில் இல.கணேசனின் இணையதளம் வித்தியாசமாகவும், விவரங்கள் அடங்கியதாகவும் இருக்கிறது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு












Click it and Unblock the Notifications