For Daily Alerts
Just In
இலங்கை ராணுவ இணையத் தளத்தை முடக்கிய புலிகள்
கொழும்பு: தனது இணையத் தளத்தை (http://www.army.lk/) விடுதலைப் புலிகள் 'ஹாக்' செய்து முடக்கிவிட்டதாக இலங்கை ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து ராணுவ இணைய தள நி்ர்வாகிகள் கூறுகையில், புலிகள் 1997ம் ஆண்டியிலிருந்தே இணைய தளங்கள் மூலம் தங்களது பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். இந் நிலையில் 2005ம் ஆண்டில் பாதுகாப்புத்துறை செயலாளர் கோதபயவின் முயற்சியால் இணையத்தில் நாங்கள் பதில் பிரச்சாரத்தை ஆரம்பித்தோம். இதில் எங்களது ராணுவ இணையத் தளம் முக்கிய பங்கு வகித்தது.
இந் நிலையில் இப்போது தங்களது போரை புலிகள் சைபர் ஸ்பேசுக்கும் கொண்டு வந்து ராணுவ இணையத் தளத்தை ஹாக் செய்துள்ளனர் என்றார்.
Story first published: Friday, May 1, 2009, 12:04 [IST]