ஜெயலலிதாவின் ஒபாமா ஸ்டைல் பிரச்சாரம்!

தஞ்சை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை பாலகிருஷ்ணனை ஆதரித்து திலகர் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்,
நெல்லுக்குக் களஞ்சியமாய், தமிழ் சொல்லுக்குக் களஞ்சியமாய், கலைகளுக்குக் களஞ்சியமாய் விளங்குகின்ற வரலாற்றுக் களஞ்சியம் தஞ்சை பூமி. எட்டாவது உலகத் தமிழ் மாநாடு நடந்த புண்ணிய பூமி. மாமன்னன் ராஜராஜனால் உருவாக்கப்பட்டு, ஆகாயத்தை உரசி நிற்கும் ஆலயமாய் தஞ்சை பெரிய கோயில் உயர்ந்து நிற்க, தனக்கென்று ஒரு புகழ் மிக்க வரலாற்றைக் கொண்ட புண்ணிய மண் இது.
காங்கிரசும், திமுகவும் இணைந்த மத்திய அரசால் நீங்கள் அடைந்த பயன் என்ன?. பொருளாதார சீரழிவு, அதிகரித்து வரும் தீவிரவாதம், விவசாயிகள் தற்கொலை, நதிநீர்ப் பங்கீட்டில் பாரபட்சம், வேலை இல்லாத் திண்டாட்டம், தொழில் வளர்ச்சி பாதிப்பு, விலைவாசி உயர்வு.. இவைகள் தானே.
நம் நாடு சுதந்திரம் பெற்ற இந்த 62 ஆண்டுகளில், முன் எப்பொழுதும் இருந்திராத பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை இப்போது நாடு பார்க்கிறது. வசதி படைத்தவர்களையும், வசதி அற்றவர்களையும், இரு கூறுகளாக பிரிக்கின்ற நவீன வாழ்க்கை முறை தீவிரம் அடைந்திருக்கின்ற நேரம் இது.
மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களாக இருக்கின்ற, உங்களைப் போன்ற விவசாயிகளை, உங்களைப் போன்ற உழவர் பெருங்குடி மக்களை, உங்களைப் போன்ற ஊருக்குச் சோறிடும் உத்தமர்களை, உதாசீனப்படுத்தியதன் காரணமாகத்தான், இன்றைக்கு ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையே இருக்கின்ற இடைவெளி மிக அதிகமாகி இருக்கிறது.
உணவையும், பொருளையும் உற்பத்தி செய்கின்ற உழவரும், தொழிலாளரும் தொடர்ந்து ஏழைகளாக இருக்க, அவர்களின் உழைப்பைப் பயன்படுத்தி ஒரு சிறு விழுக்காடு மக்கள் தொடர்ந்து செல்வந்தர்களாகிக் கொண்டிருக்கிறார்கள்.
இந் நிலை நீடித்தால் உலகில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்க முடியாது என்ற எச்சரிக்கை மணி உலக அரங்கில் ஓங்கி ஒலிக்கிறது.
இந்த முறை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கு வாக்களியுங்கள். 40 இடங்களிலும் எங்களை வெற்றிபெறச் செய்யுங்கள். உங்களை மையமாக வைத்து, ஒரு பொருளாதாரத்தை நான் இந்தியாவுக்கு அறிமுகம் செய்கிறேன்.
இதுவரை, மத்தியில் நம்முடைய சொல்படி நடக்கின்ற, திட்டமிடுகின்ற அரசு அமையாததால், நாடு முழுவதும் உங்களைப் போன்றோர் பயன்பெறக் கூடிய பொருளாதாரத்தை என்னால் முன் எடுத்துச் செல்ல முடியவில்லை. அந்த வாய்ப்பினை இப்போது எனக்குக் கொடுங்கள்.
2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணமான ஒரு பொருளாதார அமைப்பை இன்னும் எத்தனை நாளைக்கு நாம் ஏற்றுக் கொள்வது?.
எனக்கும் ஒரு கனவு உண்டு (அடடே.. இது மார்ட்டின் லூதர் கிங், ஒபாமா ஸ்டைல் ஆச்சே!). அமெரிக்க விவசாயியைப் போல, ஜப்பான் விவசாயியைப் போல, ஜெர்மன் விவசாயியைப் போல,என் அன்னை பூமியின் புதல்வர்களான, உங்களைப் போன்ற விவசாயிகளும், சொந்த வீட்டில் வாழ வேண்டும், அவர்களது பிள்ளைகள் உயர் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில வேண்டும், விரும்பும் பிள்ளைகள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும். அவர்கள் நினைக்கின்ற நிலைக்குச் செல்ல வேண்டும். அதற்கு என்னையே அர்ப்பணிக்க வேண்டும் என்று எனக்கும் ஒரு கனவு உண்டு. (அட்றா சக்கை, அட்றா சக்கை!)
விவசாயிகள் வாழுகின்ற கிராமங்கள் தோறும், நகரங்களைப் போன்ற சாலைகள் வேண்டும், பள்ளிகள் வேண்டும், மருத்துவமனைகள் வேண்டும், அவர்கள் கைக்கு எட்டிய தொலைவில், அவர்கள் விரும்பும் அனைத்தும் வர வேண்டும் என்று எனக்கும் ஒரு கனவு உண்டு.
இந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் வழியாக, எனது கனவை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். எனது கனவு மெய்ப்பட வேண்டும். அதற்கு நீங்கள் உதவ வேண்டும் என்றார் ஜெயலலிதா.
எம்ஜிஆர் பாட்டைப் பாடிய ஜெயலலிதா..
அதே போல பேச்சினிடையே ''சும்மா கிடந்த நிலத்தக்கட்டி சோம்பலில்லாமல்'' என்ற பாட்டையும், ''காடு வெளையட்டும் பெண்ணே நமக்கு காலமிருக்குது பின்னே'' என்ற பாட்டையும் பாடினார் ஜெயலலிதா.
???????????......
அதே போல சுயநலமிக்க கருணாநிதி குடும்பத்துக்கு மே 13ல் பாடம் புகட்டுவீர்களா? , எனது ஆட்சியில் அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகை பொருட்கள் என்ன விலை விற்றது?, இப்போது என்ன விலை விற்கிறது என சிந்திப்பீர்களா?, அப்போது ஒரு மாதத்தின் குடும்பச் செலவு எவ்வளவு?, இப்போது, இந்த ஆட்சியில் குடும்ப செலவு குறைந்துள்ளதா?, ஏழை, எளியோர், நடுத்தர வர்க்கத்தினர் வீடு கட்ட முடியுமா?, இப்போது சிமெண்ட், செங்கல், மணல் வாங்க முடியுமா?, எனது ஆட்சியில் உங்களை ரவுடிகள் மிரட்டினார்களா?, கடைகள், வீட்டை குண்டர்கள் காலி செய்யும்படி மிரட்டினார்களா?, போலீசாருடன், ரவுடிகள் கைகோர்த்து அராஜகம் செய்தார்களா?, இந்த தேர்தலில் அவர்களை தூக்கி எறிவீர்களா? என்று கேள்வி மேல் கேள்வியும் கேட்டு அசத்தினார்.
கூட்டத்துக்கு வந்த 2 தொண்டர்கள் பலி...
இந்தக் கூட்டம் முடிந்ததும் ஒரு லோடு ஆட்டோவில் அதிமுக தொண்டர்கள் சிலர் சொந்த ஊரான திருவையாறுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது எதிரே திருவையாறில் தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்த வேன் மீது ஆட்டோ மோதியது. இதில் 2 தொண்டர்கள் பலியாயினர்.
-
Jayalalithaa: ஜெயலலிதா வீடு பறிமுதல்.. ரூ.1.60 கோடி சொத்து வரி பாக்கியால் ஐதராபாத் மாநகராட்சி நடவடிக்கை -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன்












Click it and Unblock the Notifications