கருணாநிதியின் பிரசாரம் தொடக்கம்-6ம் தேதி சென்னையில் சோனியாவுடன் பொதுக் கூட்டம்
சென்னை: முதல்வர் கருணாநிதி தனது லோக்சபா தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார். திருச்சியில் நடக்கும் முதல் கூட்டத்தில் இன்று பேசுகிறார்.
டாக்டர்கள், நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என வற்புறுத்தியுள்ள போதிலும் கூடதனது உடல் நிலையைப் பொருட்படுத்தாமல் பிரசாரத்திற்குக் கிளம்பி விட்டார் முதல்வர். ஐந்து இடங்களில் மட்டும் அவர் பிரசாரம் செய்ய முடிவெடுத்துள்ளார்.
இன்று திருச்சியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கருணாநிதி பேசுகிறார்.
கருணாநிதியின் பிரசார திட்டம்...
இன்று மாலை 5 மணிக்கு திருச்சியில் மே தின விழா, பிரசார பொதுக் கூட்டம்.
மே 4-ம் தேதி மாலை 5 மணிக்கு மதுரையில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம்.
6ம் தேதி புதுச்சேரியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு சென்னை வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா அன்றிரவு சென்னை தீவுத் திடலில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். அதில் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
7ம் தேதி மாலை 5 மணிக்கு கோவையில் பிரசார பொதுக் கூட்டம்.
8ம் தேதி மாலை 5 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் பிரசார பொதுக் கூட்டம்.
11ம் தேதி மாலை 3 மணிக்கு சென்னையில் இறுதி தேர்தல் பிரசார பொதுக் கூட்டம்.
அதே போல பிரதமர் மன்மோகன் சிங் 7 அல்லது 8ம் தேதி மதுரையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பார் என்று தெரிகிறது.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications