பாதுகாப்பு வளையத்தில் விமான தாக்குதல்- யு.எஸ். செயற்கைக்கோள் படங்கள் 'லீக்'
இது தொடர்பான படங்களை அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகன் 'லீக்' செய்துள்ளது.
ஐ.நாவுக்கு அமெரிக்கா தந்துள்ள இந்தப் படங்கள் மூலம் இலங்கை அரசும் ராணுவமும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களிலும், வார் கிரைம் எனப்படும் போர் நேர கொடும் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Unosat என்ற செயற்கைக் கோள் எடுத்த படங்களுடன் இது தொடர்பான அறிக்கையை ஐ.நாவிடம் அமெரிக்கா தந்துள்ளது.
பாதுகாப்பு வளையம் என்று ராணுவமும் இலங்கை அரசும் கூறியதை நம்பி அங்கு குவிந்த சுமார் 1.5 லட்சம் தமிழர்கள் மீது விமானங்கள் மூலம் இலங்கை தாக்குதல் நடத்தியது. குறிப்பாக 3.5 சதுர கி.மீ சுற்றுவட்டாரத்துக்குள் பயங்கர குண்டுவீச்சு தாக்குதல் நடந்துள்ளது.
ஆனால், கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதலே இந்தப் பகுதியை பாதுகாப்பு வளையம் என அறிவித்ததோடு, இங்கு எந்த தாக்குதலையும் நடத்தவில்லை என ராணுவம் கூறி வந்தது, இப்போதும் கூறி வருகிறது.
ஆனால், ஏப்ரல் மாதத்தின் 19ம் தேதி வரை இந்தத் தாக்குதல் நடந்துள்ளதை செயற்கைக் கோள் படங்கள் உறுதி செய்துள்ளன.
இந்தப் படங்களை ஐ.நாவிடம் தருவதற்காக மட்டுமே அமெரிக்க பாதுகாப்புத்துறை வெளியிட்டது. ஆனால், அது வெளியிலும் லீக் ஆகிவிட்டது.
இந்தப் படங்கள் மூலம் இத்தனை காலமாக இலங்கை அரசு உலக நாடுகளை பொய் சொல்லி ஏமாற்றி வந்துள்ளது உறுதியாகிவிட்டதாக அமெரிக்க மனித உரிமை இயக்கத்தின் தலைவரான பீட்டர் பெளஸ்கார்ட் கூறியுள்ளார்.
இது குறித்து கருத்துத் தெரிவிக்க இலங்கை விமானப் படை மறுத்துவிட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!













Click it and Unblock the Notifications