6ம் தேதி பிரசாரத்திற்காக சோனியா தமிழகம் வருகிறார்
Subscribe to Oneindia Tamil

அவர் எங்கு பேசுவார் என்பது போன்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், சோனியா காந்தி 6-ம் தேதி தமிழகம் வருகிறார். தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். அவரது சுற்றுப்பயண விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
சோனியா காந்தி கலந்த கொள்ளும் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியும் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.
அதே சமயம், பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி ஆகியோர் தமிழகம் வருவார்களா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications