கருணாநிதி செய்த சாதனைகளை சொல்லி மாள முடியாது - தங்கபாலு
கிருஷ்ணகிரி: முதல்வர் கருணாநிதி கடந்த 3ஆண்டுகளில் செய்த சாதனைகளை சொல்லிமாள முடியாது என கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு.
கிருஷ்ணகிரி தொகுதிக்குட்பட்ட ஊத்தங்கரையில், திமுக வேட்பாளர் இ.ஜி. சுகவனத்தை ஆதரித்து தங்கபாலு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், முதல்வர் கருணாநிதி கடந்த 3 ஆண்டுகளில் செய்த சாதனைகளை சொல்லி மாளாது.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாட்கள் வேலை கொடுத்து தாழ்த்தப்பட்ட மக்களை முன்னேற்றப்பாதைக்கு மன்மோகன்சிங் கூட்டிச் சென்றார்.
ரூ.7 ஆயிரம் கோடி விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
மத்தியில் மன்மோகன் சிங் ஆட்சியில் கல்விக்கு ரூ.32,000 கோடியில் திட்டங்களும், சுகாதாரத்திற்காக ரூ.80,000 கோடியில் திட்டங்களும், கிராம வளர்ச்சித் திட்டங்களும் அமல்படுத்தப்பட்டன.
அதே போல் மன்மோகன்சிங் இந்தியா முழுவதும் 13 கோடி பேருக்கு மதிய உணவு வழங்குகிறார்.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக ரூ.56,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்றார் தங்கபாலு.


Click it and Unblock the Notifications
