ரூ.3 முதல் 5 லட்சம் விலையில் இனி நானோ வீடுகள்!!
பெங்களூர்: நானோ கார் தெரியும் உங்களுக்கு... நானோ வீடு தெரியுமா...! ரூபாய் ஒரு லட்சத்துக்கு மலிவு விலையில் ஏழைகளுக்கும் கார் சாத்தியமானதைப் போல, குறைந்த விலையில் ஏழை மக்களுக்கும் சொந்த வீடு தருவதுதான் 'நானோ வீடு' திட்டம்.
இந்த திட்டப்படி இரு விலைகளில் புதிய வீடுகள் உருவாக்கப்பட உள்ளன. ரூ.3 லட்சம் விலையில் 3000 வீடுகளும், ரூ.5 லட்சத்திற்கு 3000 வீடுகளும் உருவாகின்றன. சம்பளம் ரூ.6500 லிருந்து 13000க்குள் இருந்தால் போதும்.
மாதம் ரூ.3000 மட்டுமே தவணைத் தொகை செலுத்த வேண்டியிருக்கும்.
முதல்வகை வீடுகள் 250 சதுர அடியில் அமைந்திருக்கும். அடுத்த வகை 400 சதுர அடியில் அமைந்திருக்கும்.
சரி... இந்த வீடுகள் எந்த ஊரில் வரப் போகின்றன...?
நிச்சயம் சென்னையில் அல்ல... பெங்களூரில்!
ஜனக்ரஹா, எம்பஸிஸ், மற்றும் சிஎஸ்ஸி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்தத் திட்டத்துக்கு இன்னும் அரசு ஒப்புதல் வழங்கப்படவில்லை. ஆனால் பொதுமக்கள் ஏக ஆர்வமாகி, விசாரிப்புகளை ஆரம்பித்து விட்டார்களாம்.
குறைந்த விலை வீடுகள் என்பதால் குறைத்து மதிப்பிட்டு விட வேண்டாம் என்றும், அந்த வீடுகள் அமைந்துள்ள வளாகத்துக்குள் நீச்சல் குளம், விளையாட்டுத் திடல், பூங்கா என சொகுசு வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தித் தர உள்ளதாகவும், இதற்கு கூடுதலாக எந்த விலையும் வைக்கவில்லை என்றும் சிஎஸ்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
விரைவில் இந்த திட்டத்தை சென்னைக்கும் விரிவு படுத்தப்போவதாக கூறியுள்ளன இந்த மூன்று நிறுவனங்களும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications