வாழ்த்திய பாட்டிக்கு 'சீட்' கொடுத்த அழகிரி - பிரசாரத்தில் கலகல!
மதுரை: ஜெயிச்சு மந்திரி ஆகிடுவீங்க என்று வாய் நிறைய வாழ்த்திய பாட்டியைக் கும்பிட்ட மதுரை தொகுதி திமுக வேட்பாளர் மு.க.அழகிரி, நான் ஜெயித்தால், டெல்லிக்கு விமானத்தில் உங்களை எனக்கு பக்கத்தில் அமர வைத்து அழைத்துச் செல்கிறேன் என்று கூறி கலகலப்பூட்டினார் மு.க.அழகிரி.
மதுரையில் திமுக வேட்பாளராக தமிழக முதல்வரின் மகனும், தென் மண்டல திமுக அமைப்புச் செயலாளருமான மு.க. அழகிரி போட்டியிடுன்றார்.
சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வாக்களாளர்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றார். செல்லூர் பகுதியில் அவர் ஓட்டு கேட்டு சென்ற போது, அவரிடம் ஒரு மூதாட்டி, தம்பி, நீங்க வெற்றி பெறுவீங்க, மந்திரி ஆவீங்க என வாழ்த்தினார்.
இதைக் கேட்ட மு.க. அழகிரி உற்சாகமாகி அந்த மூதாட்டியிடம், பாட்டி உங்க வாக்கு பலித்தால், நான் பதவி ஏற்க போகும் போது பிளைட்டில் பக்கத்து சீட்டு உங்களுக்குத்தான் என்றார்.
இதைக் கேட்ட திமுகவினரும், பொதுமக்களும் வாய் விட்டுச் சிரித்தனர். பாட்டிக்கோ வெட்கம் தாங்க முடியவில்லை.












Click it and Unblock the Notifications