பிரசாரக் கூட்டத்தி்ல கார்த்திக் மீது செங்கல் வீச்சு - தப்பினார்

விருதுநகர் தொகுதிக்குட்பட்ட மொட்டுக்குண்டு, ஆர்.ஆர்.நகர், சென்னல்குடி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கார்த்திக் வேனில் சென்றபடி பிரசாரம் செய்தார்.
சென்னல்குடியில் அவர் பிரசாரம் செய்த போது திடீரென யாரோ ஒருவர் செங்கல்லை எடுத்து வேனை நோக்கி வீசினார். ஆனால் செங்கல் கார்த்திக் மீது படவில்லை. மாறாக வேன் மீது விழுந்து உடைந்தது. அதிர்ஷ்டவசமாக தப்பினார் கார்த்திக்.
செங்கல்லை வீசியதாக 25 வயதாகும் செந்தில் என்ற வாலிபரைப் போலீஸார் வளைத்துப் பிடித்தனர். இவர் சென்னல்குடியைச் சேர்ந்தவர்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து சிவகாசி ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே கார்த்திக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கார்த்திக் மீது செங்கல் வீசப்பட்டதை நடிகர் சரத்குமார் கண்டித்துள்ளார்.
இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக், நான் வெற்றி பெறுவது உறுதி. இதனால் தோல்வி பயத்தில் கல்லை வீசியுள்ளனர். இது ஜனநாயகத்தைப் படுகொலை செய்வதற்குச் சமம். எனக்கு கூடுதல் பாதுகாப்புத தேவை என்றார் கார்த்திக்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications