சென்னையில் சோனியா-கருணாநிதி 6ம் தேதி கூட்டு பிரசாரம்
சென்னை: திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வரும் 6ம் தேதி ஒரே மேடையில் கூட்டாக பிரசாரம் செய்கிறார்கள்.
இது குறித்து நேற்று திமுக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
முதல்வர் கருணாநிதி இன்று மாலை 5 மணிக்கு வடசென்னை ராயபுரம் சுழல் மெத்தை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். மாலை 7 மணிக்கு தென் சென்னை மயிலை மாங்கொல்லையில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
நாளை மே 4ம் தேதி மாலை 5 மணிக்கு மதுரையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் 6ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை தீவுத்திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியுடன் இணைந்து கூட்டு பிரசாரம் செய்கிறார்.
கோவையில் 7ம் தேதி மாலை 5 மணிக்கு நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்திலும், மேட்டுப்பாளையத்தில் 8ம் தேதி மாலை 3 மணிக்கு மேட்டுப்பாளையம் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திலும் கருணாநிதி கலந்து கொண்டு பேசுகிறார்.
11ம் தேதி மாலை 3 மணிக்கு சென்னை சிந்தாதிரிபேட்டை சிங்கண்ண தெருவில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் உரையாற்றுகிறார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் இன்று காலை கடும் காய்ச்சல் காரணமாக அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் மாலையில் நடக்கும் இரண்டு பிரசார கூட்டங்களிலும் பங்கேற்பது சந்தேகம்தான் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications