காங். ஆட்சியில் விவசாயம் படுத்துவிட்டது-நல்லகண்ணு
மானூர்: காங்கிரஸ் ஆட்சியில் விவசாயத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு விவசாயிகளை புறக்கணித்துவிட்டது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நல்லகண்ணுக்கு மானூர் பகுதியில் அதிமுக கூட்டணி கட்சியினர் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசுகையில்,
மின்சார தட்டுபாட்டால் இன்று தொழில் துறை, விவசாயத்துறை பாதிக்கப்பட்டு உள்ளது. விவசாயத்துக்கு தேவையான வசதிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து கொடுக்கவில்லை. விவசாயத்துறை புறக்கணிக்கப்பட்டது.
மானூர் பெரியகுளத்தை நம்பி இப்பகுதி விவசாயம் அமைந்துள்ளது. ஆனால் அதற்கு தேவையான நீர்பாசன வசதி செய்து கொடுக்கப்படவில்லை. அதிமுக வெற்றி பெற்றால் இப்பகுதியில் உள்ள விவசாய பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
இலங்கை போருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து இருப்பதாக இலங்கை அரசு இந்தியாவுக்கு நன்றி கூறி இருக்கிறது. ஆனால் பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் சிதம்பரம், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, முதல்வர் கருணாநிதி ஆகியோர் போரை நிறுத்தி விட்டதாக நாடகம் ஆடுகிறார்கள்.
நாங்குநேரியில் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதாக அடிக்கல் நாட்டி விட்டு சென்றனர். ஆனால் அந்த இடத்தில் இன்று முட்புதர்கள்தான் மண்டி கிடக்கிறது என்றார் நல்லகண்ணு.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications