வடக்கில் முடிகிறது தேர்தல் -தெற்கை நோக்கி வரும் தலைவர்கள்
சென்னை: வட மாநிலங்களில் தேர்தல் முடிவுக்கு வருவதைத் தொடர்ந்து கடைசி கட்டமாக தேர்தல் நடைபெறும் தமிழகத்தை நோக்கி வட மாநில அரசியல் தலைவர்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
சோனியா காந்தி, அத்வானி, ராஜ்நாத் சிங், ராகுல் காந்தி உள்ளிட்டோர் அடுத்தடுத்து தமிழகத்திற்கு வருகின்றனர். பிரதமர் மன்மோகன் சிங்கும் வருகிறார்.
நாளை வருகிறார் சோனியா..
முதல் தலைவராக சோனியா காந்தி நாளை சென்னை வருகிறார்.
பிற்பகல் புதுச்சேரி வரும் அவர் அங்குள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் உரை நிகழ்த்துகிறார்.
அதை முடித்து விட்டு மாலையில் சென்னைக்கு வரும் சோனியா, தீவுத் திடலில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
நாளை மறு நாள் அத்வானி..
பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானி 7ம் தேதி தமிழகம் வருகிறார். அதேபோல பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கும் தமிழகம் வருகிறார்.
சென்னை, நெல்லை, பரமக்குடி ஆகிய இடங்களில் நடக்கும் கூட்டங்களில் பேசுகிறார் அத்வானி.
9ம் தேதி மோடி வருகிறார்..
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி 9ம் தேதி வருகிறார்.
நாகர்கோவில், கோவை பொதுக் கூட்டங்களில் பேசுகிறார்.
10ம் தேதி ராஜ்நாத் சிங்...
அதேபோல பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் 10ம் தேதி சென்னையில் பிரசாரம் செய்கிறார்.
பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி ஆகியோரும் தமிழகம் வரவிருப்பதாக காங்கிரஸ் கூறுகிறது.
சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவும் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
4வது கட்ட தேர்தல் 7ம் தேதி நடைபெறுகிறது. அந்த்த தொகுதிகளுக்கு இன்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதையடுத்து மேலும் பல வட மாநில தலைவர்கள் தமிழகத்திற்கு பிரசாரம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications