திருச்சி ஐஐஎம் இந்த ஆண்டு முதல் துவக்கம்?

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் தொடங்கப்படும் இந்திய மேலாண்மைக் கழகம் (ஐஐஎம்) இந்த ஆண்டு முதல் செயல்படும் எனத் தெரிகிறது.

மத்திய அரசு ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம் மூலமாக நாட்டில் 6 புதிய ஐஐஎம் நிறுவனங்களை திறக்க முடிவு செய்தது. இதில் திருச்சிக்கும் இடம் கிடைத்தது.

திருச்சி ஐஐஎம் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைக்கு இந்த நிறுவனம் திருச்சி பெல் நிறுவனத்துக்கு சொந்தமான மேக்னடோ ஹைட்ரோ டையனமிஸ் வளாகத்தில் செயல்படும் என தெரிகிறது.

ஐஐஎம்-முக்கென சொந்தமாக பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இது கட்டி முடிக்கப்பட்டவுடன் அங்கு ஐஐஎம் மாற்றப்படும் என தெரிகிறது.

இந்நிலையில் இந்த நிறுவனத்தை நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்த மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சக திட்டமிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+