'வணக்கம், அன்புச் சகோதரி ஜெயலலிதா பேசுறேன்..'!!

வாக்காளர்களைக் கவர முன்பெல்லாம் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்வார்கள், ஊர் ஊராக சென்று வாக்கு கேட்பார்கள், ஒரு சுவரையும் விடாமல் விளம்பரம் எழுதுவார்கள், நாளிதழ்களில் விளம்பரம் கொடுப்பார்கள், தூர்தர்ஷனில் நேரம் ஒதுக்கப்பட்டு அதிலும் பிரசாரம் செய்வார்கள்.
இதெல்லாம் அந்தக் காலம். இப்போது டிரென்டே மாறிப் போய் விட்டது. எஸ்.எம்.எஸ்., இன்டர்நெட், வாய்ஸ் மெசேஜ் என அதி நவீனமாகி விட்டது பிரசாரம்.
அந்த வகையில் வாய்ஸ் மெசேஜ் மூலம் மதுரை வாக்காளர்களை அசரடித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
நேற்று காலை மதுரை மக்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், வணக்கம், இது உங்கள் அன்புச் சகோதரி ஜெயலலிதா.
இருளில் தவிக்கும் தமிழகத்திற்கு ஒளியேற்ற, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த, தமிழர்களைக் காக்க, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அதிமுக தலைமையிலான அணிக்கு வாக்களியுங்கள்.
மறவாதீர், உங்கள் சின்னங்கள் - இரட்டை இலை, மாம்பழம், அரிவாள், சுத்தியல், அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் என்று ஜெயலலிதாவின் குரல் போனில் ஒலித்ததும், மதுரை மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
நம்மா அம்மாவா பேசுனது என்று ஆச்சரியமடைந்து போனார்கள். கொஞ்சம் சுதாரித்தவர்கள், தங்களுக்கு வந்த எண்ணைத் ( இரு எண்களில் அழைப்பு வந்ததாம் - 0914044783360, 0914044621000) தொடர்பு கொண்டபோது பதில் வரவில்லை.
அதன் பிறகுதான் மக்களுக்குத் தெரிந்தது, வாய்ஸ் மெசேஜ் செய்தி இது என்று.
தற்போது பிரசாரத்தில் நவீனத்தைப் புகுத்தும் காலம் என்பதால் வாய்ஸ் மெசேஜிங் சர்வீஸுக்கு நல்ல கிராக்கி உள்ளதாம். கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த வாய்ஸ் மெசேஜ் சர்வீஸைப் பயன்படுத்தி வாக்களர்களிடம் வாக்கு கேட்கின்றனர்.
நேற்று ஜெயலலிதாவின் குரலில் வெளியான வாய்ஸ் மெசேஜ் செய்திக்கு, 30 விநாடிகளுக்கு 1.50 கட்டணமாம். 1000 அழைப்புகள் வரை இந்தக் கட்டணம். அதற்குப் பிறகு மேற்கொள்ளும் அழைப்புகளுக்கேற்ப இந்தக் கட்டணம் மாறுமாம்.
அடுத்த முறை கேப்டன் போனில் வந்தாலும் வரலாம், காதுகளை தயாரா வச்சுக்குங்க..
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி!












Click it and Unblock the Notifications