சென்னையில் 240 பேர் முன்னெச்சரிக்கையாக கைது
செனனை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தாதல், போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு 240 பேரைக் கைது செய்தனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று சென்னை வந்து தீவுத் திடலில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுவதாக இருந்தது. அதேபோல புதுச்சேரியிலும் அவர் பேசுவதாக இருந்தார்.
ஆனால் முதல்வர் கருணாநிதிக்கு உடல் நலம் சரியில்லாததால், சோனியாவின் வருகை ரத்தாகி விட்டது.
சோனியாவை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என பல்வேறு அமைப்புகள் அறிவித்திருந்ததால், சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக அனைத்து விதமான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தன.
நேற்று இரவு போலீசார் விடிய விடிய அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டது. முன் எச்சரிக்கையாக பெரியார் தி.க. பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன் கைது செய்யப்பட்டார்.
லாட்ஜூகளில் நடந்த அதிரடி சோதனையில் நேற்று இரவு மட்டும் 240 பேர் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகத்துக்கிடமான நபர்களின் கை ரேகைகளை பதிவு செய்த போலீசார், முகவரியை எழுதி வாங்கி கொண்டு எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் வர வேண்டும் என்று அனுப்பி வைத்தனர்.
இருப்பினும் சோனியா வருகை ரத்தாகி விட்டதால் போலீஸாருக்கு சற்று டென்ஷன் குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications